சமீபத்தில் விடுதலை படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதத்தில், அந்த பட குழு சார்பில் பார்ட்டி வைத்து கொண்டாடப்பட்டனர். இந்த படம் வெளியாவதற்கு சுமார் இரண்டு வருடங்கள் அந்த படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிகவும் சிரம ப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக இந்த கௌரவ பார்ட்டி என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலை படக்குழுவினர், என்னதான் பார்ட்டி வைத்து கொண்டாடினாலும் கூட, அந்தப் படம் கமர்சியலா வெற்றி பெறவில்லை. தயாரிப்பாளருக்கு குறைந்தது 40 கோடி நஷ்டம் என்கிறது ஒரு தரப்பு, ஆனால் மற்றொரு தரப்பு இந்த படம் தமிழ்நாடு அளவில் 42 கோடியும், உலக அளவில் சுமார் 70 கோடி வசூல் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் விடுதலை பட தயாரிப்பாளர், அந்த படம் அவருக்கு பெரும் லாபத்தை ஈட்டு தராமல் நஷ்டத்தை கொடுத்திருந்தாலும் கூட, அந்த படத்தில் நடித்த நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களும், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படமும் மொத்தம் மூன்று படங்கள் தயாரிக்க இருக்கிறார்.
விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்டர்க்குமார் விடுதலை படத்தில் தான் அடைந்த நஷ்டத்தை அதே படத்தில் ஹீரோவாக அங்கீகாரம் பெற்ற சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து சிறிய பட்ஜெட்டில் பெரும் லாபத்தை சம்பாதித்து விடலாம் என்றும் கணக்கு போட்டு இருக்கிறார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியும் அடுத்தடுத்து பிஸியாக இருந்தாலும் எல்டர்க்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்பு கொண்டு விட்டதாக தகவல் வெளியாகிறது.
அதே நேரத்தில் சூரி விடுதலைப் படத்தில் கமிட்டான பின்பே அவருக்கு பல கோடி நஷ்டம் என்பது சினிமா துறையில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்தது, காரணம் வருடத்திற்கு 20 படத்திற்கு மேல் காமெடியனாக நடித்து வந்த சூரி, பலகோடி சம்பாதித்து கொண்டிருந்த காலகட்டத்தில், விடுதலை படத்தில் ஹீரோவாக கமிட்டாகி, வந்த காமெடி கதாபாத்திரத்தை எல்லாம் கால் சீட் கொடுக்க முடியாமல் வேண்டாம் என்று உதறி தள்ளியதின் விளைவு அவருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையை விடுதலை படத்தில் சூரிக்கு கிடைத்த நடிகருக்கான அங்கீகாரம் அடுத்தடுத்து அவர் ஹீரோவாக படத்தில் கமிட் ஆகி வருவது ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, விடுதலைப் படத்தில் கமிட்டான பின்பு காமெடியாக நடிக்க வந்த கதாபாத்திரத்தை எல்லாம் கால் சீட் கொடுக்க முடியாமல் பல கோடி இழந்த சூரியக்கு.
தற்பொழுது அடுத்தடுத்து கதாநாயகனாக கிடைக்கும் வாய்ப்பின் மூலம் குறிப்பாக ஒரு படத்திற்கு எட்டு கோடி வரை சம்பளம் பேசப்பட்டு வருவதால் விட்டதை சூரி இதில் பிடிப்பது மட்டுமல்ல அவருக்கு ஜாக்பாட்டை அடித்துவிட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்.