கடினமான உழைப்பினால், சினிமாவில் வாய்ப்பை பெற்று முன்னனி காமெடி நடிகராக சுமார் வருடத்துக்கு 13 படங்கள் வரை நடிக்கும் பிசியான காமெடி நடிகராக வலம் வந்த சூரி. இவரின் வருகைக்கு பின்பே நடிகர் வடிவேலுவின் மார்க்கெட் சினிமாவில் காணாமல் போனது என்று கூட சொல்லலாம், வடிவேலு வைத்து படம் எடுக்கலாம் என நினைத்த இயக்குனர்கள் நடிகர் சூரியை புக் செய்தனர், குறுகிய காலத்தில் சூரியின் சம்பளமும் கிடு கிடுவென உயர்த்தது.
சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை ஓட்டலில் முதலீடு செய்ய தொடங்கிய சூரி, மதுரையில் பல இடங்களில் அம்மன் காபி பார், அம்மன் டிபன் சென்டர் என ஓட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார் சூரி. இப்படி காமெடி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கி வந்த நடிகர் சூரி, விடுதலை படத்தில் ஹீரோவாக கமிட்டானார், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சுமார் மூன்று வருடங்கள் விடுதலை படத்தில் நடித்து கொடுத்துள்ளார் சூரி.
மிகச் சிறிய பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு விடுதலை படம் தொடங்கப்பட்டது, மேலும் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சூரியை வெற்றிமாறன் கமிட் செய்யும்போது மிகக் குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், வெற்றிமாறனுக்கு அதில் எடுத்த சில காட்சிகள் திருப்தி இல்லாமல் மீண்டும் மீண்டும் பல காட்சிகளை மாற்றி படமாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு சிறிய பட்ஜெட்டிற்காக தயார் செய்யப்பட்ட அந்த கதையில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டதால், அந்தப் படத்தின் பட்ஜெட்டும் மேலும் அதிகரித்துக் கொண்டது. இதனை தொடர்ந்து விடுதலை படம் பார்ட் 1, பார்ட் 2 ஆக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூரி சுமார் 400 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். நடிகர் சூரி விடுதலை படத்தில் அதிக கால்சீட் கொடுத்ததால் அடுத்தடுத்து அவருக்கு வந்த காமெடி வாய்ப்புகளில் நடிக்க முடியவில்லை.
இதனால் நடிகர் சூரி ஒரு நாள் கால் சீட்டுக்கு என பல லட்சங்கள் வாங்கி, காமெடி நடிகராக பல கோடி சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், விடுதலை படத்தில் ஹீரோவாக 30 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு கமிட்டானார். ஆனால் விடுதலை படம் இரண்டு பார்ட்டாக எடுக்கப்பட்டது. இதனால் நியாயமாக சூரிக்கு இரண்டு படத்திற்கான சம்பளம் கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனால் ஏற்கனவே சூரிக்கு பேசிய 30 லட்சத்திலிருந்து கூடுதலாக வெறும் பத்து லட்சம் மட்டுமே சேர்த்து இரண்டாம் பாகத்திற்கு நடிகர் சூரிக்கு வெறும் 10 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் விடுதலை படத்தில் கமிட்டானதால் பல காமெடி வாய்ப்புகளை தவிர்த்ததால் தவிர்த்ததால் பல கோடி இழந்துள்ளார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.