இந்த படத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையா.? சூரியின் கொட்டுகாளி படமா இது.?

0
Follow on Google News

கொட்டு காளி திரைப்படத்தில் ஒரு இளம் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது. அந்த பெண்ணிற்கு பேயை ஓட்டுவதற்காக திருமணம் செய்து கொள்ளப் போகிற முறை பையன், அவங்க அப்பா, அம்மா, இன்னும் சில உறவினர்களும் பேய் ஓட்டக்கூடிய பூசாரி நோக்கி பயணக்கப்படுகிறார்கள். ஒரு ஷேர் ஆட்டோ இரண்டு பைக்கில் போகிறார்கள் போகிறார்கள் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த பெண்ணுக்கு பேய் பிடிச்சி இருக்கா.? இல்லை பேய் பிடித்த மாதிரி நடிக்கிறதா.? என்ன காரணத்துக்காக பேய் பிடித்தது என பேய் ஓட்ட போகிறார்கள் என்பதுதான் படத்தின் கரு. மேலும் இந்த படம் தொடர்ந்து ஒரு அவார்ட் பிலிம், அவார்ட் பிலிம் என தொடர்ச்சியாக இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்து கொண்டு இருந்தார், அதற்காகவே பல ஃபிலிம் ஃபெஸ்டிவல் இந்த படம் அனுப்பப்பட்டது.

படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை ஃபிலிம் ஃபெஸ்டிகளுக்கு அனுப்பியது கூட இந்த படத்தின் விளம்பரத்திற்காக தான் என்பது படம் பார்த்து ஏமாந்தவர்களுக்கு தெரிய வந்துள்ளது. சரி இப்ப படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.. பேய் ஓட்டுவதற்காக இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் முறை பையன் போகிறார்கள்.. போகிறார்கள் போகிறார்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு இயற்கை உபாதைகள் வருகிறது மேலும் அந்த பைத்தியக்கார பெண் ஒரு பாடலைக் கேட்டு முணு முணுக்க முறை பையன் அந்த பெண்ணை அடிக்கிறான். அந்த பெண்ணை மட்டும் அடிப்பது இல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் அடிக்கிறான். அப்போதுதான் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே காதல் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த காதல் ஏன் கைகூட வில்லை.

சாதி பிரச்சனையா.? பண பிரச்சனையா.? என இந்த காதல் குறித்த பின்னணி எதுவுமே சினிமாவில் சொல்லப்படவில்லை. இப்படி குழப்பமாகவே இந்த படம் நகர்கிறது. முதலில் அந்த பெண் காதலை மறக்க வேண்டும். அந்தப் பெண் காதலை மறப்பதற்காக அங்குள்ள பூசாரியிடம் அழைத்துச் செல்கிறார்கள்.இப்படி ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் கிளைமாக்ஸ் ஆக பூசாரியிடம் சென்று நிற்கிறார்கள்.

ன்ற பின்பு அவர் அந்த பெண்ணிடம் இருந்து பேயை ஓட்டினாரா.? அந்தப் பெண் ஏற்கனவே காதலித்த அந்த காதலனை மறக்கடிக்கச் செய்தாரா.? அந்த பூசாரி என்ன செய்தார்.? எந்த மாதிரி தில்லாலங்கடி வேலை செய்தார்.? இந்த படத்தின் ஹீரோ சூரி என்ன ஆனார்.? இதுதான் படத்தின் கதை. ஆனால் படத்தில் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லை. படத்தில் இசை என்பது இல்லை என்று சொல்ல அளவிற்கு படம் நகர்கிறது.

ஒரே ஷார்ட் படம் கடைசி வரை நம்ம இழுத்துச் செல்கிறது. அந்த ஒரே சாட்டை பார்க்கும் பொழுது படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகிறது. இந்த படம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்தி விட்டது. மொத்தத்தில் இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய விளம்பரம் தேவையா என்ற கேள்வி படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய பப்ளிசிட்டி கிடைத்ததற்கு முக்கிய காரணம் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது தான். காரணம் இதைவிட மிகச் சிறந்த படங்கள் எல்லாம் பப்ளிசிட்டி இல்லாமல் தோல்வியை தழுவியது. ஆனால் இது போன்ற மொக்க படத்துக்கு இவ்ளோ பெரிய பப்ளிசிட்டி கொடுத்தும் நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றம் தான் அடையச் செய்துள்ளது.