நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் சுட சுட முழு விமர்சனம் இதோ..

0
Follow on Google News

கூழாங்கல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.வினோத்ராஜ். மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து கிளம்பி வந்த அவர் தனது முதல் படத்திலேயே உலக அளவில் கவனம் ஈர்த்தார். அந்தப் படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது. ஒரு தந்தை, மகன் ஆகியோரை வைத்து கதையை லாவகமாக நகர்த்தி சென்று புதிய திரை மொழியை கையாண்டு மின்னினார் அவர்.

அந்த ஒரு படத்திலேயே வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட முக்கியமான இயக்குநர்களின் பார்வையில் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது கொட்டுக்காளியுடன் வருகிறார் வினோத். விடுதலை, கருடன் என அடுத்தடுத்து சூரி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் மாஸ் வெற்றியை ருசித்த நிலையில், அவரின் ஹீரோவாக நடித்த அடுத்த படமான கொட்டுக்காளி தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ந் தேதி திரைகாண உள்ளது. படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது.

12ம் வகுப்பு முடிந்த உடனே தனது முறைப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளாமல் பாண்டி (சூரி) அவரை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா (அன்னா பென்) பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். அவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி குடும்பமே சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்லும் பயணம் தான் இந்த படமே.

கடைசியாக மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? இந்த சமூகத்தில் நிலவும் பேய் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதா? என்பது தான் கதை. இந்த கதையில் பாண்டியாக சூரியும் மீனவாக அன்னா பென்னும் நடித்துள்ளனர். சூரியின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கிறது. படத்தில் இசையே இல்லை என்பது கவனிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மீனா என்கிற பிடிவாதக்காரப் பெண்ணின் குடும்பம் படுகிற போராட்டம்தான் இதன் கதை.

கண்டிப்பாக இந்தப் படம் வினோத்ராஜின் திரை மொழி, சூரியின் அசுரத்தனமான நடிப்பு ஆகியவற்றால் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. மேலும் படத்தை பார்த்த வெளிநாட்டினர் இது நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த கதையா என்று கேட்டு; இல்லை இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்து ஆச்சரியப்பட்டதை வைத்து; கொட்டுக்காளி தற்காலத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் என்பது உறுதியாகியிருக்கிறது.

நடிகை அன்னா பென்னுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முதல் அறிமுகமாகும். இருப்பினும் கதாநாயகி அன்னா பென் நடிப்பு சூப்பர். நம் சமூகத்தில் பெண்களின் மீதான ஒடுக்குமுறையை குறித்து இப்படம் பேசியுள்ளது. கலை படைப்புகளை காண்பவர்களுக்கான படமாக இயக்குநர் வினோத்ராஜ் எடுத்துள்ள இந்த கொட்டுக்காளி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வெகுஜன ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து நிறைவுடன் வெளியேறுவார்களா? என்றால் நிச்சயம் இல்லை.

பொதுமக்களுக்கு தியேட்டரில் படத்தை கொடுக்க வரும் போது, கடைசி கிளைமேக்ஸ் காட்சியை நிறைவான படமாக முடித்திருந்திருக்கலாம். மேலும் இயக்குனர் வினோத் ராஜ் கொட்டுக்காளி படத்தின் மூலம் உலகத்தர சினிமாவை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்துள்ளார். வினோத்ராஜ் போன்ற இயக்குநர்கள் இதே மாதிரி படங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டுமென்றால் அவர் இயக்கும் படங்களை தவறாமல் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் பார்க்க வேண்டும்.