அடுத்தடுத்து குவியும் ஹீரோ வாய்ப்புகள்… முன்னனி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகர் சூரி..

0
Follow on Google News

நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படம் விடுதலை, இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு நடிக்க படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்தார் வெற்றிமாறன்.

இந்த படம் இயக்குனர் சூரியின் படமா.? அல்லது விஜய் சேதுபதியின் படமா.? என்கின்ற குழப்பம் நீடித்தது. மேலும் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் ஆசையில், அவருக்கு வந்த பல காமெடி கதாபாத்திரங்களை தியாகம் செய்துவிட்டு தான் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சுமார் மூன்று இரண்டு வருடங்களாக விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால் மற்ற பட வாய்ப்புகளை சூரி இழக்க நேரிட்டது.

இந்த நிலையில் பெரும் தியாகத்திற்கு பின்பு விடுதலைப் படத்தில் கமிட்டான சூரி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்தது அவருக்கு வருத்தத்தை அளித்திருந்தாலும், விடுதலைப் படத்தில் விஜய் சேதுபதியை விட சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதையை அமைத்துள்ளார் வெற்றிமாறன் என கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் சூரியின் நடிப்பை பார்த்தவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை படம் வெளியாவதற்கு முன்பே, அந்த படத்தில் சூரி நடித்தது பற்றி அறிந்தவர்கள், மேலும் விடுதலை படம் திரைக்கு வந்தால் அது மிகப்பெரிய ஹிட் அடித்து, சூரிக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வர தொடங்கிவிடும்.

இதனால் சூரி சம்பளம் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதால், படம் வெளியாவதற்கு முன்பே பல தயாரிப்பு நிறுவனங்கள் சூரியை போட்டி போட்டு ஹீரோவாக நடிப்பதற்கு கால் சீட் கேட்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் சூரி கதாநாயகன் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி தற்பொழுது படப்பிடிப்பும் சத்தம் இல்லாமல் மதுரை அருகே நடந்து வருகிறது.

மேலும் சூரியிடம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஹீரோவாக கால்ஷீட் கேட்டு வரும் நிலையில் சூரி விடுதலை பட வெளியான பின்பு தன்னுடைய முடிவை தெரிவிக்க இருப்பதாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் விடுதலை வெளியார்க்கும் முன்பே அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சூரி விடுதலைப் படம் வெளியான பின்பு முன்னணி நடிகர்களுக்கு டாப் கொடுப்பார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

துபாய் ஓட்டலில் enjoy… காயத்ரி ரகுராம் துபாய் ரகசிய சந்திப்பு பற்றிய தகவல் வெளியானது..