சூரி சினிமா வாழ்க்கையை குளோஸ் செய்த வெற்றிமாறன்… பாவம் சினிமா வாய்ப்பின்றி தவிக்கும் சூரி..

0
Follow on Google News

மதுரை மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து 1991ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி படத்தில் ரஜினிகாந்த் கதாபத்திரம் சூர்யா என்கிற பெயரை தனக்கு சூட்டி கொண்டு,தாய் தந்தை பெயரிட்ட ராம் என்கிற பெயரை மாற்றிவிட்டு, சினிமா மோகத்தில் சென்னை வந்தவர் பின்பு சூர்யா என்கிற பெயரை சுருக்கி சூரி என மாற்றிக்கொண்டு கடினமான போராட்டங்களுக்கு பின்பு சுமார் 18 வருட முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் வெண்ணிலா கபாடி குழு படத்தில் புரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டவர்.

கடினமான உழைப்பினால், சினிமாவில் வாய்ப்பை பெற்று முன்னனி காமெடி நடிகராக சுமார் வருடத்துக்கு 13 படங்கள் வரை நடிக்கும் பிசியான காமெடி நடிகரானார் சூரி. இவரின் வருகைக்கு பின்பே நடிகர் வடிவேலுவின் மார்க்கெட் சினிமாவில் காணாமல் போனது என்று கூட சொல்லலாம், வடிவேலு வைத்து படம் எடுக்கலாம் என நினைத்த இயக்குனர்கள் நடிகர் சூரியை புக் செய்தனர், குறுகிய காலத்தில் சூரியின் சம்பளமும் கிடு கிடுவென உயர்த்தது.

சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை ஓட்டலில் முதலீடு செய்ய தொடங்கிய சூரி, மதுரையில் பல இடங்களில் அம்மன் காபி பார், அம்மன் டிபன் சென்டர் என ஓட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார் சூரி. இப்படி காமெடி நடிகராக எந்த பிரச்சனை இல்லாமல் சென்று கொண்ட சூரி சினிமா வாழ்க்கைக்கு வெட்டு வைக்கும் விதத்தில் வந்தவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் எந்த ஒரு படமும் சூரி நடித்ததில்லை.

இருந்தும் சூரியை சந்தித்த வெற்றிமாறன் .. நீ காமெடி நடிகர் இல்லை, நீ ஹீரோ மெட்டிரியல் என உசுப்பேத்தி விட, அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என சூரி தெரிவிக்க, ஒரு வழியாக கதையை சொல்லி, இந்த படத்தில் நடித்தால் உங்கள் அடுத்தகட்ட லெவல் வேற என சூரியை விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார் வெற்றிமாறன், இதனால் தனக்கு வந்த பல காமெடி பட வாய்ப்புகளை இழந்தார் சூரி.

தன்னை ஹீரோ என ஆசை காட்டி படப்பிடிப்பும் நடத்திய வெற்றிமாறன், திடீரென விஜய் சேதுபதியை விடுதலை படத்தில் சூரியை விட அதிக காட்சிகளில் நடிக்க வைக்க, இந்த படத்தில் யார் ஹீரோ என்கிற குழப்பம் சூரிக்கு வந்தது. இதன் பின்பு ஏமாந்தது போதும் என மீண்டும் காமெடி பாத்திரங்களின் நடிக்க தொடங்கினர் சூரி, ஆனால் அடிக்கடி விடுதலை படத்தில் இன்னும் பத்து நாள் கால் சீட் கொடுத்தால் போதும், இன்னும் 5 நாள் கால் சீட் கொடுத்தால் போதும் என சூரியை மற்ற படங்களில் நடிக்க விடாமல் தடையாக இருந்தார் வெற்றிமாறன்.

இதனால் காமெடி வேடத்தில் புதிய படங்களில் சூரியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் வருடத்துக்கு 13 படங்கள் வரை நடித்துவந்த சூரியின் கைவசம் தற்பொழுது விருமன் படம் மட்டுமே உள்ளது. சூரி பட வாய்ப்பு கேட்டாலும், முதலில் வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு வா என்கிறார்களாம் இயக்குனர்கள், இப்படி காமெடி நடிகராக உசத்தில் இருந்த சூரியின் சினிமா வாழ்க்கையை குளோஸ் செய்த வெற்றிமாறன், விடுதலை படத்தில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் திருப்தியில்லை என அதை நீக்கிவிட்டு மேலும் 30 நாள் கால் சீட் சூரியிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரிஷாவை வைத்து ஆழம் பார்க்கும் விஜய்…. மாஸ்டர் பிளான் போடும் விஜய்… என்ன பிளான் தெரியுமா.?