அன்னே.. அன்னே… ஒரு டம்ளர் தண்ணீர் தங்க..கையில் காசில்லாமல் நடிகர் சூரியை பசி வாட்டி எடுத்த சம்பவம் ..

0
Follow on Google News

மதுரையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நடிகர் சூரியின் தந்தை ஒரு நாடக நடிகர் என்பதால், அவருடைய தந்தையின் நடிப்பை பார்த்து சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார் நடிகர் சூரி. சென்னை சென்றதும் பல தயாரிப்பு நிறுவனங்கள் எங்க படத்தில் நடிக்க வாங்க வாங்க என்று அழைத்து விடுவார்கள் என்கிற கனவில் வந்த நடிகர் சூரிக்கு, சென்னை வந்த பின்பு தான் தெரிந்தது சினிமாவில் நடிப்பது எளிதான காரியம் இல்லை என்பது.

இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்க சினிமா துறையைச் சார்ந்த ஏதாவது ஒரு தொழில் செய்தால் மட்டுமே அதன் மூலம் சினிமாவில் மெல்ல உள்ளே செல்ல முடியும் என உணர்ந்து. சினிமாவில் செட் அமைக்கும் பனி போன்ற சினிமா துறையில் என்ன வேலை கிடைக்கிறதோ அதை செய்து வந்த சூரி. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்திற்கு செட் அமைக்கும் காண்ட்ராக்டரிடம் பலகைக்கு ஆணி அடிக்கும் வேலையை செய்துள்ளார்.

சினிமா சார்ந்து வேலை இல்லை என்றால், வயிற்று பசிக்காக டிப்பர் லாரிக்கு மணல் அள்ளி கொட்டும் வேலைகளையும் செய்து வந்துள்ளார் சூரி. இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை செய்து பசியை போக்கி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த சூரி, ஆர்யா நடிப்பில் வெளியான கல்லூரியின் கதை படத்தில் நடிகர்கள் தேர்வு சென்னை சாலி கிராமத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வருகிறது.

இரண்டு நாட்களாக சாப்பிடாமல் கடும் பசியில் அப்போது இருந்த நடிகர் சூரி, கல்லூரியின் கதை படத்தின் நடிகர்களின் தேர்வுக்கு செல்ல பஸ்சுக்கு கூட காசில்லாமல் பல கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளார். பசி மயக்கத்தில் பல கிலோ மீட்டர், அதுவும் எங்கே ஆடிஷன் நடந்து முடிந்து விடுமோ என அவசர அவசரமாக வரும் வழியில் இருக்கும் டீ கடைகள், ஓட்டல்களில் அன்னே..அண்ணே.. ஒரு டம்ளர் தண்ணீர் தாங்க என, வெறும் தண்ணீர் மட்டும் வாங்கி குடித்து பசியை அடங்கி கொண்டு சாலிகிராமம் வந்தடைந்துள்ளார் சூரி.

ஒவ்வொருவராக ஆடிஷனில் கலந்து கொண்டு நடித்து காண்பிக்க, அடுத்து சூரி உள்ளே சென்று நடித்து காண்பிப்பதற்கு முன்பு மயங்கி கீழே விழுந்து விடுகிறார். அங்கே இருந்தவர்கள் சூரி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்ததும் என்னாச்சு என கேட்க, இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை அதான் மயக்கப்பட்டு விழுந்து விட்டேன், நான் நடித்து காண்பிக்கிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்க என சூரி பசி மயக்கத்தில் கேட்டுள்ளார்.

உடனே அங்கே இருந்தவர்கள், என்னடா இது வம்பா போச்சே என, சூரிக்கு சாப்பாடு வாங்கி தந்து பசியை போக்கிவிட்டு, பட வாய்ப்பு கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார்கள், தன்னுடைய பசியே இந்த படத்தின் வாய்ப்பை பறித்து விட்டது என்கிற வருத்தத்தில் திரும்பிய சூரி, இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு தேடுவதை கைவிடுவதில்லை, தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடி வந்த சூரி. வழக்கம் போல் ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு நடைபெற்று வரும் தெரு கூத்து நிகழ்வில் வாய்ப்பு கேட்டுள்ளார்.

அதில் அவருக்கு காமெடி வாய்ப்பு கிடைத்துள்ளது, அங்கே நடந்த தெரு கூத்தில் சூரியின் நடிப்பை பார்த்த பல உதவி இயக்குனர்களின் பார்வையில் சூரி மேல் பட்டது, சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இப்படி கடும் போராட்டத்திற்கு பின்பு, வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் புரோட்டா சூரியாக மிக பெரிய வெற்றியை பெற்று இன்று பிசி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.