சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்… சிவகுமார் குடும்பத்தினர் எங்கே ஒளிந்து கொண்டார்கள்..

0
Follow on Google News

சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் ரேஸ் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகமே தமிழக தலைநகரான சென்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகத்தான் இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடைபெற்று வருகிறது

இருந்தாலும் சென்னையில் நடைபெற்று வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை பலரும் எதிர்க்க காரணம், சென்னையில் போன்ற நெரிசலான இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வெளிப்புறத்தில் நடத்தி இருக்கலாம் என்று தான் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பு தான் பெற்றுள்ளது.

இருந்தாலும் இன்று மோட்டார் ரேஸ் எப்படி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இருந்ததோ, அதேபோன்று விண்வெளிக்கு இந்தியா ராக்கெட் விடுவதும் உலக அரங்கில், இந்தியாவை தலை நிமிரச் செய்தது. இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிவகுமார், தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதற்கு மட்டுமில்லை விவசாயத்திற்கே தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பல பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடிநீருக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம், கங்கை ஆற்றிலும் யமுனை ஆற்றிலும் இருந்த 60% தண்ணீர் வீணாகப் போகிறது, அந்தத் தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும் என்று தெரிவித்த நடிகர் சிவகுமார்,

செவ்வாய் கிரகத்திற்கு பல கோடி செலவழித்து ராக்கெட் அனுப்பி இருக்கிறார்கள், செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா.? என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியவர் மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர், அந்த தண்ணீர் வசதி செய்துவிட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பலாம் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் சிவகுமார்.

அது மட்டும் இல்லை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமாரின் மருமகள் ஜோதிகா, தஞ்சையில் நடந்த படப்பிடிப்பிற்காக தஞ்சை கோவிலுக்கு சென்றதாகவும் தெரிவித்தவர், மேலும் கோவில்களை பராமரிக்கஅதிக செலவு செய்கிறார்கள், உண்டியலில் காசு போடுகிறார்கள் அதற்கு பதில் பள்ளிக்கூடங்களை கட்டலாம் மருத்துவமனைகளை பராமரிக்கலாம் என்று பேசியிருந்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தின் கஷ்டமான வாழ்க்கையை தான் இன்றளவும் தமிழகத்தில் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வறட்சி மாவட்ட ராமநாதபுரம் சிவகங்கை போன்ற பகுதிகளில் எந்த ஒரு தொழில் வளர்ச்சி இல்லாமல் மக்கள் ஒவ்வொரு நாளும் படாத பாடு பட்டு வருகிறார்கள்.

வாழ்வாதாரத்துக்காக இப்படி ஒரு சூழ்நிலையில் சென்னையில் பல கோடி செலவில் இப்படி ஒரு கார் ரேஸ் நடத்துவது தேவையா என்று நடிகர் சிவகுமார் இதற்கு முன்பு இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிய போது விமர்சனம் செய்து பேசியவர் தற்பொழுது பேசுவதற்கு துணிவு உண்டா என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கோவிலுக்கு உண்டியலில் காசு போடுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டலாம் பள்ளிக்கூடங்களை கட்டலாம் என்று சொன்ன நடிகை ஜோதிகா, சென்னையில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டி நடத்துவதற்கு பதிலாக எத்தனையோ பள்ளிக்கூடம் கட்டலாம் மருத்துவமனை கட்டலாம் என்று கருத்து சொல்ல துணிவு இருக்கா என்று பலரும் சிவகுமார் குடும்பத்தை வறுத்தெடுத்து வரும் நிலையில் எங்கே சென்றுள்ளார் சிவகுமார் மற்றும் அவருடைய மருமகள் ஜோதிகா என்றும் வலை வீசி தேடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.