ஆணவத்தில் சிவகுமார் குடும்பத்தினர்… அவமானப்பட்ட சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்க 15கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும், ஆனால் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதம் சம்பளத்தொகை மற்றும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரி ஞானவேல்ராஜா மீது வழக்கு தொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பல தயாரிப்பாளர்கள் பல நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளனர், இது தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வருகின்ற ஓன்று, அந்த வகையில் சிவகாத்திகேயனுக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளம் பாக்கி வைத்திருக்க கூடும், ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது மட்டும், அதுவும் மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகி மூன்று வருடங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்துள்ளது பற்றி விசாரித்ததில் சிவகார்த்திகேயன் பட்ட அவமானம் தான் என்று கூறப்படுகிறது.

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு நான்கு கோடி சம்பளம் பாக்கி இருந்தது, படம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து தயாரிப்பாளர் சூழல் அறிந்து பாக்கி பணம் கேட்டு தயாரிப்பாளருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை சிவகார்த்திகேயன். பொதுவாக நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பள தொகையில் பத்து சதவிகிதம் டிடிஎஸ் தொகையை தயாரிப்பாளர்கள் பிடித்து கொண்டு தான் சம்பளத்தை கொடுப்பார்கள்.

அப்படி பிடித்து கொண்ட டிடிஎஸ் தொகையை அந்த நடிகரின் பெயரில் வருமான வரித்துறையில் தயாரிப்பாளர் செலுத்த வேண்டும், ஆனால் சிவகார்த்திகேயனிடம் பிடித்து கொண்ட டிடிஎஸ் தொகையை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முறையாக சிவகார்த்திகேயன் பெயரில் வருமானவரித்துறையில் செலுத்தவில்லை, இதனால் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது.

ஏற்கனவே வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு, பல முறை சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்தும் மிஸ்டர் லோக்கல் படத்திற்கான டிடிஎஸ் தொகையை செலுத்துமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை வலியுறுத்தி வந்துள்ளனர், ஆனால் ஞானவேல்ராஜா கண்டு கொள்ளவில்லை, இதனை தொடர்ந்து வருமான வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய பின்பு ஞானவேல்ராஜாவை தொடர்பு கொண்டு இது உங்களுக்கே நியாயமா என்று கேட்டுள்ளனர் சிவகார்த்திகேயன் தரப்பினர் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஞானவேல்ராஜா தரப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தில் அடைந்த நஷ்டம் குறித்து பேசியுள்ளனர். அதற்கு படத்தில் அதிகம் லாபம் வந்தால் அந்த படத்தில் நடித்த நடிகருக்கு லாபத்தில் ஒரு பகுதியை பிரித்து தருவீர்களா என்று சிவகார்த்திகேயன் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஞானவேல்ராஜா தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனை மிக இழிவாக பேசி, அவமானப்படுத்தப்பட்டார் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பஞ்சாயத்தை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று புகார் கொடுங்க, அங்க வைத்து பேசி கொள்வோம் என ஞானவேல்ராஜா திமிராக பேசியதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகுமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்றும், தற்பொழுது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் சிவகுமார் குடும்பத்தினர் அதிகாரமிக்கவராக செயல்பட்டு வருவதால் தனக்கு சாதகமாக இரண்டு சங்கங்களும் செயல்படும் என்பதால் தான் ஞானவேல்ராஜா தரப்பினர் திமிராக பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும், மேலும் தன்னை அவமானப்படுத்தியவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்து நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக வழக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன் என்றும், இந்த வழக்கு சட்டப்படி சிவகார்த்திகேயனுக்கு சாதகமாக இருப்பதால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வசமாக சிக்கி உள்ளார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே போன்று சினிமா துறையில் சிவகுமார் குடும்பத்தினர் ஆணவத்துடன் ஒரு மாஃபியா போன்று செயல்படுவதாக ஏற்கனவே ஒரு நடிகை குற்றசாட்டியது குறிப்பிடதக்கது.

ரஜினி மகள்கள் இடையே குடுமிப்பிடி சண்டை…  தலையை பிய்த்து கொண்ட ரஜினி..! இறுதியில் நடந்தது என்ன.?