சிவகார்த்திகேயனை சினிமாவில் இருந்து விரட்ட களம் இறங்கிய சினிமா மாஃபியா குடும்பம்… இமான் பின்னனி என்ன.?

0
Follow on Google News

பொதுவாக சினிமாக்களில் ஒரு மாபியா கும்பல் போல் சிலர் செயல்பட்டு வருவதை சினிமா துறையில் இருப்பவர்கள் யாரும் மறுக்க முடியாது. அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சினிமா துறையை வைத்து கொண்டு, ஒரு குறிப்பிட்டவர்களை தவிர பிறர் யாரும் வளர்ந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்க கூடியவர்கள் தான் அந்த சினிமா மாஃபியா.

ஒருவரை சினிமாவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றால், அதற்காக எந்த எல்லைக்கும் சென்று சூழ்ச்சியால் வீழ்த்தும் வல்லமை பெற்றவர்கள் சினிமா மாஃபியா என்று அழைக்க கூடிய அவர்கள். இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அணைத்து சினிமாவிலும் ஒரு குறிப்பிட்ட குடும்பம் மாஃபியா போன்று செயல்பட்டு அந்தந்த மொழி சினிமாவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்தில் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்தவர். ஆனால் அவருடைய வளர்ச்சி சினிமாவில் இருக்கும் பலருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக சிவகார்த்திகேயனையே டம்மியாக்கி, அவருடைய சினிமா கேரியரையே காலி செய்வதற்காக சினிமா துறையை கட்டுக்குள் வைத்திருக்கும், சினிமாவில் மாஃபியா போன்று செயல்படும் சினிமா துறையை சேர்ந்த ஒரு குடும்பம் செயல்பட்டுள்ளார்கள்.

சினிமா மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் தயாரிப்பு நிறுவனம் மூலம் சுமார் நான்கு படங்கள் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் புதிய படம் ஏதும் தொடங்காமல், வேறு எந்த படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட்டாக விடாமல் தன்னுடைய உறவினரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் கடும் நெருக்கடியை கொடுத்து வந்துள்ளது அந்த மாஃபியா குடும்பம்.

ஒரு கட்டத்தில் நீங்க கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தருகிறேன் அக்ரீமெண்ட் ரத்து செய்துவிடுங்க, வேறு படத்தில் நான் நடிக்க செல்கிறேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்தாலும், அதற்கும் ஒப்பு கொள்ளவில்லை, இந்த ஒரு இக்கட்டான சூழலில், சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய வட்டத்தில் இருக்கும் மூத்த சினிமா கலைஞர்கள், நீங்கள் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளீர்கள், உங்களை சினிமாவில் இருந்து காலி செய்ய தான் உறவினர் மூலம் உங்களை அந்த மாஃபியா குடும்பம் ஒப்பந்தம் செய்துள்ளது என சிவகார்த்திகேயனை எச்சரிக்க, அதன் பின்பு கடும் போராட்டத்துக்கு பின்பு அந்த பிரச்னையில் இருந்து வெளியே வந்தார் சிவகார்த்திகேயன்.

ரெமோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு சிவகார்த்திகேயன் கதறி அழுததற்கு பின்னணியில் சினிமா மாஃபியா என்று சொல்ல கூடிய சினிமா துறையை சேர்ந்த அந்த குடும்பத்தினர் தான் என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை சினிமாவில் பல யுக்திகளை கையாண்டு வந்த அந்த சினிமா மாஃபியா கும்பல் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இசை அமைப்பாளர் இமான் தனக்கு சிவகார்த்திகேயன் மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்றும், அதை வெளியில் சொல்ல முடியாது என உருக்கமாக தெரிவித்த விஷயம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயனை காலி செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை சந்தித்த சினிமா மாஃபியா குடும்பம் தற்பொழுது இமான் விவகாரத்தை தங்களுக்கு கிடைத்த வர பிரசாதமாக கருத்தியுள்ள தீவிரமாக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தங்களுக்கு விசுவாசமாக இருக்க கூடிய சமூக வலைதள பிரபலங்கள், மற்றும் தங்களுடை ஐடி விங் மூலம் சிவகார்த்திகேயன் இமேஜை மிக பெரிய அளவில் டேமேஜ் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு சிவகார்த்திகேயன் இமேஜை மிக பெரிய அளவில் டேமேஜ் செய்யப்பட்டு வருவதில் பின்னணியில் சினிமா மாஃபியா கும்பல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. என்ன தான் இமான் விவகாரத்தில் சிவகார்த்திகேயனை காலி செய்ய சினிமா மாஃபியா கும்பல் செயல்பட்டாலும் கூட தம்பி மாதிரி நினைத்து பழகியா இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் மன்னிக்க முடியாத குற்றம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.