தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் இருந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் காமெடி நடிகருக்கான வாய்ப்பு தேடி வந்த போது, அவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்து மெரினா படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இதன் பின்பு தனுஷ் உடன் 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இந்த படத்திற்கு பின்பு அவருக்கென ஒரு நடிகருக்கான அடையாளம் கிடைத்து, அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை தொட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இது சிம்புவை வைத்து நம்ம ஆளு, விஷாலை கதகளி என தோல்வி படங்களை கொடுத்து சரிவை சந்தித்த இயக்குனர் பாண்டிராஜ், மார்க்கெட் உச்சத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார் போல் கதையும் தயார் செய்து கால்சீட் கேட்டிருந்தார் இயக்குனர் பாண்டிராஜ்.
ஆனால் அந்த காலகட்டத்தில் நான் ரெம்ப பிசி என்கிற தோரணையில் சிவகார்திகேயன் பாண்டிராஜை புறக்கணித்து விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் பண்டி ராஜ் – சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இனி சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் கூட்டணி சாத்தியமில்லை என கூறப்பட்ட நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் மிக பெரிய ஹிட் கொடுக்க. அதே காலகட்டத்தில் ரெமோ, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன்,
கடைக்குட்டி சிங்கம் போன்று கமெர்ஷியல் படம் ஓன்று சேர்ந்து பண்ணலாம் என பாண்டிராஜ் உடன் சமரசம் அடைந்து கால் சீட் கொடுத்தார் சிவகார்த்திகேயன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பகையை மறந்து இணைத்தது சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் கூட்டணி. இந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், டாக்டர் படங்கள் வெற்றியை கொடுத்து.
மறுப்பக்கம் நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என தொடர் தோல்வியை கொடுத்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், தன்னுடைய இருப்பை தக்க வைக்க மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் பாண்டிராஜ். இந்த சுழலில் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த பாண்டிராஜ், நம்ம மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டுள்ளார். புதிய படத்திக்கான கதையையும் உங்களுக்கு ஏற்றார் போல் ரெடியாக இருக்கிறது என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு முடியும், முடியாது என எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலம் தாமதம் செய்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன். இருந்தும் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கால்சீட் கேட்டு தொடர்ந்து முயற்சித்து வந்த பண்டிராஜுக்கு முறையான பதில் ஏதும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து தராமல், தட்டி கழித்து வந்துள்ளனர்.
இதனால் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பாண்டிராஜ், இனியும் சிவகார்திகேயனுக்காக காலத்தை கடத்தாமல் விஷாலிடம் கமிட்டாகி உள்ளார் பாண்டிராஜ், ஏற்கனவே பாண்டிராஜ் விஷால் கூட்டணியில் வெளியான கதகளி படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் கூட, தற்பொழுது விஷாலை வைத்து எடுக்க போகும் புதிய படம் மிக பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கையில் உள்ளார் பாண்டிராஜ்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் பாண்டிராஜ் சரிவில் இருக்கும் இந்த சோதனை கட்டத்தில் நன்றி இல்லாமல், அவருடைய இயக்கத்தில் நடிக்க தற்பொழுது மறுத்து வரும் சிவகார்திகேயன், உதவி மனப்பான்மை பற்றி நடிகர் அஜித்தை பார்த்து கற்று கொள்ள வேண்டும் என்றும், ஹெச்.வினோத், சிறுத்தை சிவா போன்றார் தோல்வியை தழுவிய போது மீண்டும் கால் சீட் கொடுத்து அவர்களை தூக்கி விட்டவர் அஜித் என்பது குறிப்பிடதக்கது.