என்ன மன்னிச்சுடுங்க இமான் அண்ணே…தவறு நடந்து போச்சு… மனம் விட்டு பேசிய சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

2019 ஆம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், டி இமானும் எந்த ஒரு படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது என தெரிவித்த இமான்,

மேலும், சிவகார்த்திகேயனின் துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” இந்த விஷயங்கள் என் குழந்தைகளை பாதிக்கும் அதனால் நான் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என டி.இமான் மிக வேதனையுடன் தெரிவித்து இருந்தார். மேலும் இமான் அளித்த அடுத்த பேட்டியின் “வில்லன் யார் என்று எனக்கு தெரியும். அதனால் நான் எனக்கு ஏன் இப்படி நடந்துவிட்டது என்று கடவுளிடம் முறையிடமாட்டேன் என தெரிவித்து இருந்தார் இமான்.

இந்நிலையில் டி.இமானின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி, அப்படி என்ன துரோகம் செய்தார் சிவகார்த்திகேயன் என்று ஒட்டுமொத்த இணையத்தையும் ரசிகர்கள் அலசி ஆராய ஆரம்பித்தனர். இமானின் முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்து சிவகார்த்திகேயனை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

அதாவது இமான் அவரது மனைவி மெளனிகா இருவரின் விவாகரத்துக்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தம்பி மாதிரி சிவகார்த்திகேயனிடம் பழகி வந்துள்ளார் இமான். அப்படி இருக்கையில் சிவகார்திகேயனால் அவரது குடுப்பதில் மிக பெரிய பூகம்பம் வெடித்துள்ளது, இதனால் தான் சிவகார்த்திகேயன் – இமான் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ளனர் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது இமான் குறித்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது, அதில் பேசிய சிவகார்த்திகேயன், நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனெனில் நான் கொஞ்சம் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் அவரை பார்க்க முடியாமல், பேச முடியாமல் இருக்கிறது.நாங்கள் இரு குடும்பமும் ஒன்றாக சாப்பிட போவோம். இப்போது அது நடப்பது இல்லை என வேதனை பட்ட சிவகார்த்திகேயன்.

மேலும் நான் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பி என்றுதான் கூப்பிடுவார். அது ஒரு ஜெனியூனான ரிலேஷன்ஷிப். எந்த ஒரு ஈகோவும் எங்களுக்குள் இருக்காது. அதேபோல் அவர் மீது எப்போதும் எனக்கு அண்ணன் என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் ஏதாவது ஒரு பாடலில் திருத்தம் சொன்னால்கூட நான் பயந்துகொண்டேதான் அவரிடம் சொல்வேன் என சிவகார்த்திகேயனின் பழைய பேட்டியில், எனக்கும் இமான் அண்ணனுக்கும் இருப்பது ஒரு ஜெனியூனான ரிலேஷன்ஷிப் என்றும், நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும் என சிவகார்த்திகேயன் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here