நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் அவருடைய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து பலத்த அடி வாங்கியுள்ளது. இதில் நடிகர் சூர்யாவின் மார்க்கெட் சரிந்தது மட்டுமில்லாமல் அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகி உள்ளது. குறிப்பாக சூர்யா நடித்த கங்குவா படம் நன்றாக இல்லை என்றால் மக்கள் நன்றாக இல்லை என்று கடந்து சென்று இருப்பார்கள்.
ஆனால் படம் பட த்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் நடிகர் சூர்யாவை மிக கடுமையாக கேள்வி கிண்டல் செய்தார்கள், குறிப்பாக கங்குவார் படத்தை பார்க்காதவர்கள் கூட சூர்யாவை வச்சு செய்தார்கள். இதற்கு காரணம் சூர்யா மீது இருந்த வெறுப்பு தான் அதே நேரத்தில் இந்த வெறுப்பு உருவாவதற்கு காரணமும் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா ஆகியோரின் நடவடிக்கைகள் தான் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொண்டு நம்முடைய நடவடிக்கைகளில் மாற்றம் செய்தால் மட்டும் தான் அடுத்த வெற்றியை நோக்கி நகர முடியும். ஆனால் கங்குவா படம் பலத்த தோல்வி அடைந்த நிலையில் நேர்மையான முறையில் அடுத்த எப்படி வாய்ப்பை பெற்று படத்தை தன்னுடைய படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று சிந்திக்காமல், சிவகார்த்திகேயனுக்கு குழி பறிக்கும் வேலையை சூர்யா செய்தது அம்பலமாகி உள்ளது.
அதாவது கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு சூர்யா அந்த படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு என்கின்ற படத்தில் நடிப்பதாக கமிட் ஆகிருந்தார். அந்த படத்திர்காண ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில். அந்தப் படத்தின் கதையில் சில மாற்றங்களை கொண்டு வர தன்னுடைய மனைவி ஜோதிகா சொன்னதை கேட்டு புறநானூறு படத்தின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என சுதா கொங்கராவிடம் சூர்யா கேட்டிருக்கிறார்.
ஆனால் சுதா கொங்கரா முடியாது என்றதும் மனைவி சொல்லே மந்திரம் இந்த படமே வேண்டாம் என வெளியேறினார் சூர்யா. இதனைத் தொடர்ந்து புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகி தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் கங்குவா தோல்விக்கு பின்பு சுதா கொங்காரவை தொடர்பு கொண்ட சூர்யா.
தற்போது புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனை வெளியேற்றிவிட்டு மீண்டும் நம்ம சேர்ந்து பண்ணலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால் சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் வைத்து இந்த படத்திற்கு அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளது. இன்னும் பிடிப்பு மட்டும் தான் பாக்கி, ஆகையால் எந்த ஒரு காரணத்துக்காகவும் புறநானூறு படத்திலிருந்து சிவகார்த்திகேயனை எடுக்க முடியாது.
அதே நேரத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பின்பு திரும்ப இப்ப வந்து சிவகார்த்திகேயனை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக என்னை நடிக்க வையுங்கள் என்று சொன்னால் இது எந்த விதத்தில் மனிதாபிமான அடிப்படையில் சரியாக இருக்கும். இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து சிவகார்த்திகேயன் காத்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது இது போன்ற ஒரு நிகழ்வு சரியாக இருக்காது என்று சூர்யா முகத்தில் அடித்தது போன்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்திகேயன் வாய்ப்பை தட்டி பறிக்கும் சூர்யாவின் இந்த செயல், தற்பொழுது சூர்யாவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய சிவகார்த்திகேயனுக்கு குழி பறித்து சூர்யா குளிர் காயா முயற்சிப்பது என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.