தீபாவளிக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கிறது, சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன். ஜெயம் ரவி நடிப்பில் பிக் பிரதர். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகவே தற்பொழுது நடிகர் கவினை ஒரு பெருங்கூட்டம் களம் இறக்கி உள்ளது. கவின் நடித்துவரும் ப்ளடி பெக்கர் படம் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் அமரன் வெளியாகும் அதே தேதியிலே வெளியாகிறது.
இந்த நிலையில் ப்ளடி பெக்கரை படத்தை தயாரிப்பது வேறு யாருமில்லை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இயக்குனர் நெல்சன் தான். நடிகர் சிவகார்த்திகேயன், நெல்சன், கவின் மற்றும் ப்ளடி பேக்கர் படத்தை இயக்கும் இயக்குனர் உட்பட அனைவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இவர்கள் அனைவருமே விஜய் தொலைக்காட்சியோட ஒரு ப்ராடக்ட் தான்.
ஆனால் சிவகார்த்திகேயன் அபார வளர்ச்சி அவர்கள் கூட இருந்தவர்களுக்கு மிகப்பெரிய பொறாமையை ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம். வேட்டை மன்னன் படம் தான் நெல்சன் இயக்கிய முதல் படம், இந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்தவர் சிவபாலன், தொடர்ந்து நெல்சன் இயக்கம் அனைத்து படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவ பாலன் என் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நெல்சனிடம் கேட்டு கொண்டு வந்துள்ளார்.
அப்படி இருக்கையில் ஜெயிலர் படம் வெற்றி அடைந்தால் நிச்சயம் உன் படத்தை நான் தயாரிக்கிறேன் என்று நெல்சன் உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே ஜெயிலர் படம் வெற்றியைத் தொடர்ந்து சிவபாலனை இயக்குனராக ப்ளடி பெக்கர் என்கின்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறார் நெல்சன். இந்த நிலையில் இந்த படத்தின் கதை டிஸ்கஷன் போது யார் ஹீரோ என்று கேட்டபோது.
அதற்கு சிவபாலன் கவின் என்று தெரிவித்திருக்கிறார், ஆனால் கவின் என்றதுமே நான் படம் தயாரிப்பதால் எனக்கு லாஸ் ஆனால் பரவாயில்லை, உன்னுடைய சினிமா ககேரியரே போய்விடும் என்று நெல்சன் தெரிவிக்க, இல்லை சார் போட்டோ ஷாப் எடுத்து இருக்கேன் என்று கவின் வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷாப்பை நெல்சனிடம் காண்பித்திருக்கிறார் சிவபாலன்.
இதனை தொடர்ந்து என்னைவிட இந்த கதையில் மிகவும் ஆழமாக சிந்தித்துள்ளார் சிவபாலன், நிச்சயம் இது சரியாக வரும் என்று சொல்லி இருக்கிறார் நெல்சன். மேலும் படத்தை பார்த்த நெல்சன், படம் வேற லெவல் என்று உச்சகட்ட மகிழ்ச்சிக்கு சென்று விட்டார். அதே நேரத்தில் தங்கள் கூடவே இருந்து சிவகார்த்திகேயனின் உயரம் இவர்கள் கண்ணை உறுதியுள்ளது . அதனால் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வெளியாக அதே தேதியில் கவின் நடித்த பிளாடி பேக்கர் படத்தை ரிலீஸ் செய்து சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவினை மோத விட்டு வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது இந்த குழுவினர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு எதிரியாகவே நெல்சன் கவின் போன்ற அவருடைய கடந்த கால நண்பர்கள் மொத்தமாக மாறி உள்ளார்கள் என்கிறது கோடம்பாக்கம். அதே நேரத்தில் சினிமா துறையில் பலரும் சிவகார்த்திகேயனுக்கு போட்டி எந்த உச்ச நடிகர் கிடையாது. கவினை சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வளர்த்து விட முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே தற்போது சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வெற்றி மாறன் தயாரிப்பில் கவினை வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவினை வளர்த்து விட்டு மோத விட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையை சேர்ந்த பெரும் கூட்டம், களத்தில் இறங்கி கவினுக்கு ஆதரவாக வேலை செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது, அந்த வகையில் சிவகார்த்திகேயனை விழ்த்துவரா கவின் என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.