விஜய் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக கரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரம் எடுத்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ் கே ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், வரிசையாக பல்வேறு படங்களை தயாரித்தார். சில படங்கள் சரியாக ஓடாமல் வசூலில் பலத்த அடி வாங்கவே நஷ்டம் அடைந்தார். ஹீரோவாக நடித்து பல கோடிகளை அருமையாக சம்பாதித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ஆற்றில் ஒரு கால் சேட்டில் ஒரு கால் வைத்த கதையாக தயாரிப்பில் இறங்கி பல கோடி கடனாளியாக மாறியதுதான் மிச்சம்.
மேலும், அவர் கடனை அடைக்க முடியாமல் திணறியதால் அவரது ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் பஞ்சாயத்து நடந்தது. அப்படி பிரச்சினை ஏற்படும் சமயங்களில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ அல்லது கடன் வாங்கிக் கொடுத்தோ அப்போதைக்கு அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு படத்தை ரிலீஸ் செய்வார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளரிடம் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கி கடனை அடைப்பார்.
அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் இடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக சம்பளம் இல்லாமல் படத்தை நடித்துக் கொடுப்பார். அப்படி அயலான் படத்திற்கு கூட சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாங்கிய கடனை அடைக்க கடன் மேல் கடன் வாங்கி நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார். அயலான் படத்தோடு அவர் வாங்கிய முழு கடனையும் அடைத்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடுமையான்கடன் சுமையில் இருந்த காலகட்டத்தில், தன்னுடைய நண்பர் ஆர்டி ராஜாவை தயாரிப்பாளர் ஆக்கி ரெமோ படத்தை துவங்குகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்தப் படம் தொடங்கியது முதல் கடுமையான பிரச்சனைகளை சிவக்குமார் உறவினரான ஞானவேல் ராஜா தரப்பு சிவகார்த்திகேயனுக்கு கொடுத்து வந்திருக்கிறது.
இப்படி பல சிக்கல்களை சந்தித்து ஒருவழியா ரெமோ படம் எடுத்து அந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன் கதறி அழுததின் பின்னணிக்கு காரணம் சிவகுமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜா கொடுத்த டார்ச்சர் தான் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது. அப்படி ஒரு சூழலில் சிவகார்த்திகேயன் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவில் இருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்பொழுது ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், மூன்று வருடத்திற்கு முன் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்ததாக தெரிவித்த சிவகார்த்திகேயன், அப்போது அவரது மனைவி ஆர்த்தி தான், அஜித் மற்றும் விக்ரமிற்கு அடுத்து கடந்த 20 ஆண்டுகளில் சினிமா பின்புலம் இல்லாமல் வந்து சாதித்த பிரபலங்கள் யாரும் இல்லை.
நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். அது சாதாரண விஷயம் இல்ல. அதனால் இதை விட்றாதீங்க. உங்களுக்கு கிடைத்த புகழை கொண்டாடுங்க என சொல்லி ஊக்கமளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி. மனைவி சொன்ன வார்த்தைகளால் தான் சினிமாவை விட்டு விலகும் முடிவை கைவிட்டாராம் சிவகார்த்திகேயன்.