வாலி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் SJ சூர்யா, முதல் படமே மிக பெரிய ஹிட், இரண்டாவது நடிகர் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியவர், அடுத்து நடிகராக அவதாரம் எடுத்தார், இப்படி இயக்குனர், நடிகர் என ஒரு ரவுண்டு வந்த SJ சூர்யா சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல், மீண்டும் சினிமாவில் வில்லன் நடிகராக ரீ – என்ட்ரி கொடுத்தார், இவர் வில்லனாக நடித்த மெர்சல், ஸ்பைடர் , மாநாடு போன்ற படங்கள் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான மாநாடு படம் அதில் ஹீரோவாக நடித்த சிம்புவை விட, வில்லன் பாத்திரத்தில் நடித்த SJ சூர்யாவின் நடிப்பு தான் பிரபலமாக பேசப்பட்டது. மேலும் அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரங்கள் நடிகர் SJ சூர்யாவை தேடி வந்துகொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து SJ சூர்யா சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. SJ சூர்யா வில்லன் நடிகராக ரீ – என்ட்ரி கொடுத்த பின்பு அவருக்கென ரசிசகர்கர்களும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1ம் தேதி வெளியாக இருக்கும் டான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா, இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் சிவகாத்திகேயனின் எஸ்.கே.ப்ரொடெக்ஷன் இரண்டும் இணைந்து தயாரிக்கிறது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருந்த டான் படம், பீஸ்ட் படம் வெளியான காரணத்தினால் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் தாமதமாக திரைக்கு வருகிறது.
SJ சூர்யா வில்லனாக நடித்து கடைசியாக வெளியான படம் மாநாடு, இந்த படம் அவருக்கு மிக பெரிய பாராட்டை பெற்று தந்ததால், அவருடைய வில்லன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் டான் படத்திற்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்தும் விதத்தில் படத்தின் விளம்பர போஸ்டர்களில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமமாக SJ சூர்யா புகைப்படமும் இடம் பெற செய்துள்ளார் பட குழுவினர்.
இது சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததும், செம்ம டென்ஷனில் அதெல்லாம் கூடாது, என்னுடைய புகைப்படத்துக்கு சமமாக SJ சூர்யா படத்தை போட கூடாது. இந்த படத்தில் நான் ஹீரோவா , SJ சூர்யா ஹீரோவா என சிவகார்த்திகேயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் சிவகார்த்திகேயன் சொந்த படம் என்பதால், யாரும் ஏதும் எதிர்த்து பேச முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் பிரமோஷன் போஸ்டர்களில் SJ படம் இடம்பெற வில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் டான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய SJ சூர்யா, தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு அடுத்து குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டு பிள்ளையாக இருக்கும் அன்பை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுருக்கிறார், என்று சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசினார். அப்படி பேசியவர் புகைப்படம் கூட பிரமோஷன் போஸ்டரில் இடம் பெறக்கூடாது என செய்தது, சிவகார்த்திகேயனின் ஆணவத்தின் உச்சம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.