தனியார் தொலைக்காட்சியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன், பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, தொகுப்பாளராக இருந்த போதே இவருக்கென ஒரு ரசிகர் இருந்தனர், தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அணைத்து டி ஆர் பி ரேட்டிங் வரிசையில் முன்னனி இடம் பிடித்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமான போது, படம் வெளியாகும் முன்பே மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது, இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார் அதனை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன் பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என அடுத்த கட்டத்துக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளமும் உயர்ந்தது, அப்போது தனுஷ் தயாரிப்பில் மீண்டும் சிவகாத்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது, அப்போது இருந்தே சிவகார்த்திகேயன் – தனுஷ் இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் தொடர்கிறது.
இந்த நிலையில் தனுஷ் வளர்த்து விட்ட சிவகார்த்திகேயன் அவ்வப்போது தனுசுக்கே போட்டியாக சினிமா துறையில் பல நேரங்களில் செயல்பட்டு வருகிறார், சென்னையில் தனுஷ் அலுவலகம் இருக்கும் அதே பகுதியில் சிவகார்த்திகேயனும் அவருடைய அலுவலகத்தை திறந்து தனுசுக்கு எதிராக தன்னுடைய கெத்தை காட்டியவர்.
அதேபோன்று சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள புதிய bmw உயர்தர காருக்கு தனுஷ் பயன்படுத்திய 0010 என்கின்ற அதே நம்பரையும் பயன்படுத்தி தனுஸை மேலும் வெறுப்படைய செய்து வருகிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற தீபாவளி அன்று தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக தன்னுடைய நடிப்பில் அயலான் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தனுஷ் படத்தை விட அதிக வசூல் அடையச் செய்து, தனுஷை விட மார்க்கெட்டில் தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் தீபாவளி அன்று தனுஷ் உடன் நேரடியாக மோதிவிடலாம் என்கின்ற முடிவில், தனுஷ் நடிப்பில் வெளியாகும் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக தன்னுடைய அயலான் படத்தை களம் இறக்க சிவகாத்திகேயன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.