சூரியை பிளான் செய்து காலி செய்த சிவகார்த்திகேயன்… சூரி சினிமா வாழ்க்கை போச்சா..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி, தற்போது டாப் நடிகராக மாறி இருக்கிறார். முதலில் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்களால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டு பிரபலமான இவர், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் தான் சூரியை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாக்கியது.

இதனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில், விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து, அந்த படம் ஹிட் அடித்ததால் இப்போது விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படமும் சூப்பர் ஹிட் அடித்து சூரியின் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது. இப்போது 8 கோடி சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோவாக மாறியிருக்கும் சூரி கையில், அடுத்தடுத்த படங்களும் இருக்கிறது.

இந்நிலையில்தான் சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி என்ற படம் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருக்கிறார். ஆனால் சூரியை வீழ்த்த சிவா இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என்ற பகீர் தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொட்டுக்காளி படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது. ஆனால் அது பலரையும் கவரவில்லை. வெறும் சேவல் கூவும் சத்தத்தை வைத்தே டிரெய்லரை முடித்திருப்பார்கள்.

இதனை பார்த்த ரசிகர்களோ, டிரெய்லரே மொக்கையா இருக்கு, படமும் அப்படிதான் இருக்கும் என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான் படத்தின் ப்ரீ ஷோ பார்த்த பலரும் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். அதாவது கொட்டுக்காளி படத்தில் சூரிக்கு தனது தாய்மாமன் மகளான முறைப்பெண்ணை கல்யாணம் முடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அந்த தாய்மாமன் மகள் வேறோரு இளைஞனை காதலிக்கிறாள் என்பது சூரி குடும்பத்திற்கு தெரியவருகிறது.

வசியம் செய்ததால் தான் இந்தப் பிள்ளை இப்படி இன்னொருத்தனை விரும்புகிறாள் என்று சூரியின் குடும்பம் நம்புகிறது. அதனால் அன்னாபென்-ஐ ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அதன் பிறகு என்ன என்பதே கதை. கதையின் நாயகன் அல்ல, கதையின் வில்லனாக சூரி நடித்துள்ளார். அன்னாபென் வெறும் பார்வையாலே பல உணர்வுகளை கடத்துகிறார். வசனம் இன்றி, காட்சிகள் வழியே கதை சொல்ல வேண்டும் என இயக்குநர் அதிகம் மெனக்கெட்டுள்ளதால் படத்தின் விஷூவல் வைத்தே நாம் டயலாக்கை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் கால்மணி நேரத்தில் சொல்ல வேண்டியதை ஒன்றரை மணிநேரமாக இழுத்துள்ளனர். ஆக மொத்தம், இந்த படம் நன்றாக இல்லை. ஒரு திரைப்படம் போலவே இல்லை. சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.. படம் மொக்கையாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ஓடாது என இப்படத்தை பார்த்த சினிமா செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப் போட்டிருக்கிறார். இதையடுத்து தான், சூரியின் மார்க்கெட் மேலே போவதை பொறுத்துகொள்ள முடியாமல் சிவகார்த்திகேயன்தான் கொட்டுக்காளி படம் மூலம் அவரின் மார்க்கெட்டை சரிக்க திட்டம் போட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் சொல்ல துவங்கிவிட்டனர்.

வேண்டுமென்றே மொக்கையான கதையில் சூரியை நடிக்க வைத்து, அவரே படத்தை தயாரித்து, ஒரு நண்பருக்கு சிவா துரோகம் செய்யலாமா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். அதோடு கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் நடிகர் சிவகார்த்திகேயன், தனுஷை மறைமுகமாக தாக்கி, யாருக்கும் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லிக் கொண்டு சுத்தமாட்டேன். ஆனால் பல பேர் என்னை பார்த்து அப்படி சொல்கிறார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

அது அப்போதே பெரும் பேசுபொருளானதை அடுத்து, நீங்கள் யாருக்கும் வாழ்க்கை கொடுக்க மாட்டீர்கள், நீங்கள் வாழ்க்கையை தான் கெடுப்பீர்கள், அப்படித்தான் தற்போது சூரியின் படத்தை கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், அப்படியெல்லாம் இல்லை, சூரியின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர் எஸ்.கே என்று சிவாவின் ஆதரவாளர்களும் மறுபக்கம் பொங்கி வருகின்றனர்.