கோடிகளை விட்டு கொடுத்த சிவகார்த்திகேயன்.. அட பிழைக்க தெரியாத ஆளா இருக்கிறாரே..!

0
Follow on Google News

சினிமா நடிகர் நடிகைகளை பொருத்தமாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் அவர்களுடைய சம்பளத்தை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்வார்கள். அந்த வகையில் பல வருடங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்த சிம்புவுக்கு மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் ரிஎன்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்தது.

இதனை தொடர்ந்து மாநாடுக்கு முன்பு 5 கோடி முதல் 7 கோடி வரை படத்தில் சம்பளம் வாங்கி வந்த நடிகர் சிலம்பரசன் மாநாடு படத்திற்கும் பின்பு தன்னுடைய சம்பளத்தை 40 கோடியாக உயர்த்தினார். மாநாடு பின்பு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய சம்பளத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை நடிகர் சிலம்பரசன்.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சிம்பு சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடி வருகிறார்கள், இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் சிலம்பரசன் வீட்டிலே இருக்கிறார். பட வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார் சிலம்பரசன்.

இந்நிலையில் முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரசாத் தயாரிக்க இருக்கிறது, சுமார் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை சந்தித்த நிலையில்.

தன்னுடைய சம்பளத்திலிருந்து 5 கோடி ரூபாய் தானாக முன்வந்து இந்த படத்தில் குறைத்துக் சிவகார்திகேயன் கொண்டதாகவும் மேலும் இதே போன்று முருகதாஸும் தன்னுடைய கடைசி படங்கள் தோல்வியின் காரணமாக பட வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதை உணர்ந்து தன்னுடைய சம்பளத்தை 5 கோடி அவரும் தானாக குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் பட்ஜெட் மிக சிறிய அளவில் உள்ளதால் தங்களுடைய சம்பளத்தை அதிகரித்தால் படத்தின் பட்ஜெட்டும் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளரின் சூழல் அறிந்து இருவருமே தங்களுடைய சம்பளத்தை தானாக முன்வந்து குறைத்து கொண்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.