எந்த நிலைக்கு சென்றாலும் வந்த வழி மறவாதே என்கின்ற பழமொழிக்கு எதிராக ஆணவத்தில் நடந்து கொண்ட சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன். அவருடைய அதிர்ஷ்டமும் நல்ல நேரமும் கைகொடுக்க சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பைப் பெற்றார்.
ஆரம்ப கட்டத்தில் ஹீரோவாக நகைச்சுவை கலந்த கமர்சியல் திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்தாலும், ஆக்சன் படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளராக உருவெடுத்து தொடர்ந்து இவர் தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவி, மிகப்பெரிய கடனாளி ஆனார் சிவகார்த்திகேயன். கடன் தொல்லையால் மிகப்பெரிய சிரமத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன்.
அவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் தொடர் ஹிட் கொடுத்தது. இருந்தாலும் தற்பொழுது வரை சுமார் 75 கோடி ரூபாய் வரை கடனில் தான் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் வெளியான காலகட்டத்தில் விஜய் நடித்த பீஸ்ட், அஜித் நடிப்பில் வெளியான வலிமை, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே, போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆனால் அதே காலகட்டத்தில் வெற்றி படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன். தன்னை ரஜினி, விஜய் அடுத்த தமிழ் சினிமாவில் நான் தான் என்கின்ற ஒரு எண்ணத்தில் அவர் ஆதரவு தொலைக்காட்சி மற்றும் சில சினிமா துறையினர் மூலம் ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.தொடர்ந்து இரண்டு படம் வெற்றி பெற்று ஆணவத்தில் ஆடிய சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதனால் ஓவர் நைட்டில் தலைகீழாக கவுந்து விழுந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்திகேயன் தற்பொழுது நடித்துவரும் மாவீரன் படத்தின் இயக்குனருடன் மோதல் போக்கை சிவகார்த்திகேயன் கையில் எடுத்துள்ளதால், மாவீரன் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து இருவருக்கும் உரசல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து மாவீரன் படத்தில் கதையில் மூக்கை நுழைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கதையில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, மேலும் சிவகார்த்திகேயன் நடித்த சீமா ராஜா படத்தின் கதையில் பல குளறுபடி செய்து, அந்த படத்தை தோல்வியடைய செய்தார் என்பதை சுட்டிக்காட்டி, அந்த வகையில் நான் என்னுடைய மாவீரன் படத்தில் இடம் கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் இயக்குனர்.
இதனால் படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனும் நேரடியாக பேசிக்கொள்ளாமல் உதவி இயக்குனர் மூலம் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டு வந்தனர். இதனிடையே இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடந்த உச்சகட்ட மோதல் காரணமாக மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றுள்ளது. மேலும் 30 நாட்கள் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடக்காமல் பாதியிலே நிற்கிறது.
இதனால் மாவீரன் படத்தில் நடிப்பதற்கு மற்ற நடிகர் நடிகைகளிடம் வாங்கிய கால்சீட் வீணடிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொங்கல் அன்று வெளியாகும் வாரிசு படத்தின் திரையரங்குகளில் மாவீரன் டீசரை வெளியிட்டு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இந்த படத்தை ரீச் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தனர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும்.
ஆனால் சிவகார்த்திகேயன் ஆணவத்திமிரினால் மாவீரன் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது. இதனை தொடர்ந்து இந்த தகவல் சினிமா துறையில் உள்ள மற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதற்கு பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயங்குவதால், சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது