சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமாகி அவருடைய மூன்றாவது படமான கேடி பில்லா கேளடி ரங்கா படத்தின் வெற்றிக்கு பின்பு சிவகுமாரின் உறவினரான ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்கிறார். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. மேலும் அன்றைய காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் என்ன சம்பளம் வாங்கினாரோ அந்த சம்பளத்திற்கு அக்ரீமெண்ட் போடப்படுகிறது.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஒவ்வொரு படமும் முடியும் பொழுது ஞானவேல் ராஜாவிடம் ஒரு படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து அந்த கேட்க அதற்கு ஞானவேல் ராஜா அடுத்தடுத்த படங்கள் முடித்துவிட்டு தொடங்கிடலாம் என்று இழுத்துக் கொண்டு செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினி முருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சூப்பர் ஹிட் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்து மிகப்பெரிய அளவில் அவருடைய சம்பளமும் கிடுகிடு என உயர்கிறது.
இந்த காலகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் என்ன சம்பளம் பேசப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு அக்ரிமெண்ட் போடப்பட்டதோ அதே சம்பளத்தில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து பெரும் லாபம் சம்பாதித்து விடலாம் என்றும் மேலும் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை குறைப்பது மூலம் அவருடைய மார்க்கெட்டை சரித்து விடலாம் என்கின்ற ஒரு நோக்கத்தில் பழைய அக்ரிமென்படி சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன் சிவகுமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜா.
ஆனால் அதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொள்ளவில்லை வேறு படங்களில் நடிக்கிறார், ஆனால் தன்னிடம் இருக்கும் அக்ரீமெண்ட்டை காட்டி என்னிடம் என்ஓசி வாங்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க கூடாது என தயாரிப்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மேலும் சிவக்குமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜா என்பதால் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்திலும் அவர்களின் ஆதிக்கம் பெருமளவு இருந்தது.
இதனால் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய தன்னுடைய நண்பர் ஆர்டி ராஜாவை தயாரிப்பாளர் ஆக்கி ரெமோ படத்தை துவங்குகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்தப் படம் தொடங்கியது முதல் கடுமையான பிரச்சனைகளை சிவக்குமார் உறவினரான ஞானவேல் ராஜா தரப்பு சிவகார்த்திகேயனுக்கு கொடுத்து வருகிறது.
இப்படி பல சிக்கல்களை சந்தித்து ஒருவழியா ரெமோ படம் எடுத்து அந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன் கதறி அழுததின் பின்னணிக்கு காரணம் சிவகுமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜா கொடுத்த டார்ச்சர் தான் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சினிமாவில் சிவக்குமார் குடும்பத்தின் ஆதிக்கம் சினிமாவில் மிகப்பெரிய அளவில் இருந்ததால் ஞானவேல் ராஜா கொடுக்கும் டார்ச்சலை சமாளிக்க முடியாமல் இதிலிருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிஸ்டர் லோக்கல் என்கின்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் இந்த படத்திற்கு பேசப்பட்ட சம்பளத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கவில்லை ஞானவேல் ராஜா, இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நீதிமன்றம் சென்று பஞ்சாயத்து எல்லாம் அனைவரும் அறிந்தது. இப்படி ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டம் ஞானவேல் ராஜாவை வைத்து சிவகார்த்திகேயனை சினிமாவில் வளர விடாமல் மார்க்கெட்டை காலி செய்ய போடப்பட்ட திட்டம் தான் என பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான கங்குவா படத்தை மக்கள் ஒரு பக்கம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள் இதுதான் கர்மாவா என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.