ஏற்றி விட்டவர்களை ஏறி மிதிக்கும் சிவகார்த்திகேயன்… சிவகார்த்திகேயன் முகத்திரை கிழிந்தது..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சுதான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி மிகப் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. யாரும் யாரையும் வளர்த்து விட முடியாது. அதனால் நான் அப்படி சொல்ல மாட்டேன், ஏனென்றால் என்னை அப்படியே சொல்லி சொல்லி பழகி விட்டார்கள், என சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு நடிகர் தனுஷை தான் குறிப்பிட்டு பேசுகிறார் என சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தனுஷ் எந்த ஒரு மேடையிலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் நான்தான் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. அதே போன்று சிவகார்த்திகேயனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டியராஜ் அவர்களும் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடியவர், அவரும் நான் தான் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டேன் என்று எந்த ஒரு மேடையிலும் பொது நிகழ்விலும் பேசவில்லை.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வளர்ச்சிக்கு உதவியாக இருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தின் இயக்குனர் பொன் ராம் கூட எந்த இடத்திலும் இப்படி பேசவில்லை. அப்படி இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் திட்டமிட்டு அவர் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டு காளி திரைப்படத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்வதற்காகவே சர்ச்சை கூறிய வகையில் பேச வேண்டும் என்று மிக தெளிவாக பக்கா பிளான் செய்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தன்னிலை மறந்து பேசுவதற்கான வாய்ப்பே இல்லை காரணம் அவர் ஒரு தொகுப்பாளர். பல மேடைகளை பார்த்த சிவகார்த்திகேயன் திட்டமிட்டேதான் கொட்டுகாளி படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்று பேசி உள்ளார் என்கின்றது சினிமா வட்டாரம். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு துணையாக இருந்த அனைவரையுமே சிவகார்த்திகேயன் கழட்டிவிட்ட ஒரு சந்தர்ப்பவாதி என்கிறது சினிமா வட்டாரங்கள்.

குறிப்பாக சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர் அவருடைய நண்பர் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தொடர்ந்து சிவகார்த்திகேயனை பிரமோஷன் செய்வதற்காகவும் சிவகார்த்திகேயனை ஒரு உச்ச நடிகராக கொண்டு வருவதற்கு என்னெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும் அதற்கு எவ்வளவு எல்லாம் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக என திட்டமிட்டு செயல்பட்டு வந்த ஆடி ராஜா தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை தயாரித்தவர்.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் சரிவர போகவில்லை மிகப் பெரிய கடன் ஆனதும் உன்னால தான் நான் கடன் ஆனேன் என்று அப்படியே தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த ஆர்டி ராஜா மீது பழியை போட்டுவிட்டு அவரை கழட்டி விட்டவர் தான் சிவகார்த்திகேயன். மேலும் ஒரு உதாரணத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்து சிவகார்த்திகேயன் முகத்திரையை கிழித்துள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு தேடிய போது ஒரு இயக்குனர் சிவகார்த்திகேயனை கமிட் செய்கிறார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு அந்த படத்தில் நடிக்க 50,000 சம்பளம், அந்த படம் தொடங்குவதற்கு முன்பு அந்த இயக்குனரிடம் நன்கு நெருக்கமாக பழகி வந்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்படுகிறது.

இதன் பின்பு அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் படங்களில் வாய்ப்பு கிடைத்து ஒரு மிகப்பெரிய உயரத்துக்கு வந்த பின்பு ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் நன்கு பழகிய அந்த இயக்குனர் இயக்குனர் மீண்டும் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொல்லப் போகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அவருடைய பெயரை கேட்டதுமே சந்திக்க கூட மறுத்து விட்டாராம்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு சந்தர்ப்பவாதி என்றும் அவர் தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும் கழட்டி விடுவார் என்கின்றது சினிமா வட்டாரங்கள். அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களை சிவகார்த்திகேயன் உதாசீன படுத்தும் போது அவர்கள் என்னால் வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன் என சொல்ல தான் செய்வார்கள் என்கிறது சினிமா வட்டாரங்கள்.