சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், அவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்து மீண்டும் பழைய சிவகார்த்திகேயனாக தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டார். எனவே தொடர்ந்து இரண்டு படங்களை ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வெளியான பிரின்ஸ் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயன் தற்பொழுது பிரின்ஸ் பட தோல்வியால் அடுத்த அவர் நடிக்க இருக்கும் மாவீரன் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மாவீரன் படத்தின் கதை குறித்த சில தகவல்கள் வெளியாகிறது. அதில் கடற்கரை ஓரத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் காலி செய்ய வைக்கின்றது.
ஒரு அரசியல்வாதி மூலம் அதை செய்கிறார்கள் அதில் அந்த அரசியல்வாதியாக மிஸ்கின் நடிக்கிறார். மேலும் மிஸ்கின் அந்த கடற்கரை ஓரத்தில் இருக்கும் மக்களிடம் நீங்கள் இந்த இடத்தை விட்டு காலி செய்யுங்கள், உங்களுக்கு அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
இந்த கதை ஏற்கனவே வடசென்னை படத்தி ஒரு பகுதி மக்களை கார்ப்பரேட் நிறுவனம் காலி செய்ய முயல்கிறது, இயக்குனரா அமீர் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம்போராடுகிறார், அது போன்று தான் மாவீரன் படத்தில் அந்த இடத்தை காலி செய்ய திட்டமிடும் மிஷினுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்.
இந்த படத்தை மிகவும் சீரியஸாக எடுத்துச் செல்ல அந்த படத்தின் இயக்குனர் விரும்பியுள்ளார், ஆனால் படம் மிகவும் சீரியஸாக இருந்தால் அது நன்றாக இருக்காது என்பதால். படத்தை கமர்சியலாக கொண்டு போக வேண்டும் என்று சிவகார்த்திகேயன் வலியுறுத்தியதை தொடர்ந்து அந்த படத்தில் சில பாடல் காட்சிகளும் மற்றும் சில நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.