என் மானமே போச்சு… தெரியாம செஞ்சுட்டேன்… இமானிடம் கதறிய சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட்டை திருமணம் செய்தார் இமான். இவர்களின் 13 ஆண்டு திருமண வாழ்க்கை கடந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், விவாகரத்துக்கு காரணம் என்ன என்கிற குழப்பம் இதுவரை நீடித்து வந்த நிலையில், சமீபத்திய சிவகார்த்திகேயன் குறித்து டி இமானின் பேட்டி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் தனக்கு மிக பெரிய துரோகத்தை செய்து விட்டதாக தெரிவித்த டி இமான், குழந்தைகள் பாதிக்க கூடாது என்பதால் இதற்கு மேல் பேச முடியாது என உருக்கமாக இமான் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இமான் குடும்பத்தை சிவகார்திகேயன் உள்ளே புகுந்து நாசம் செய்து விட்டார் என மிக கடுமையாக பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசிய இன்டர்வியூ வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானால், தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் உடனே சிவகார்த்திகேயனுக்கு என சமூக வலைதளங்களில் ஐடி விங்காக செயல்படும் குழுவினரிடம் இமான் தன்னை பற்றி பேசியுள்ள அந்த இன்டர்வியூ வீடியோ வைரலாக கூடாது எதாவது பண்ணுங்க என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயனின் ஐடி விங் களத்தில் இறங்கி, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக என்னெல்லாம் செய்ய முடியுமா அத்தனையையும் செய்தவர்கள், ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை விமர்சனம் செய்கின்றவர்களிடம் சமூக வலைதளத்தில் சண்டையிட்டு வந்துள்ளார்கள், இந்நிலையில் வீடியோ வைரலாகி விவகாரம் பெரிதாவதை உணர்ந்த சிவகார்த்திகேயன் உடனே நிலைமை மோசவதற்குள் டி இமான் காலில் விழுந்து விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

டி இமான் இன்டெர்வியூ வீடியோ வெளியான அன்று இரவே டி இமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிவகார்த்திகேயன். அண்ணா நான் செய்த தவறுக்கு மன்னித்து விடுங்கள் என்று சிவகார்த்திகேயன் கெஞ்சியதாகவும், மேலும் தன்னை பற்றி நீங்கள் பேசிய இன்டர்வியூ வீடியோவை சம்பந்தப்பட்ட அந்த youtube சேனலை தொடர்பு கொண்டு உடனே டெலிட் பண்ண சொல்லுங்க அண்ணா என தெரிவித்த சிவகார்த்திகேயன்.

இந்த விபரம் வெளியில் வைரலால் ஆவது என்னுடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆகும், மேலும் என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய சகோதரிக்கு, இந்த விஷயம் தெரிந்தால் என்னுடைய மானம் கப்பலேறிவிடும் அண்ண, தயவு செய்து அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட யூடியூப் நிறுவனத்திடம் தெரிவித்து டெலிட் செய்து விடுங்கள் என இமானிடம் சிவகார்த்திகேயன் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட மனம் இறங்காத டி இமான் என்னுடைய குடும்பம் மற்றும் நான் பாதிக்கப்பட்டதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா.? இப்போது உனக்கு பிரச்சனை என்றதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படி பேசுகிறாய்.? எந்த ஒரு காரணத்துக்காகவும் அந்த இன்டர்வியூ வீடியோவை நான் அந்த youtube சேனலிடம் டெலிட் பண்ண சொல்ல மாட்டேன் என்று இமான் உறுதியாக சிவகார்த்திகேயனிடம் தெரிவித்தாகவும்.

இருந்து விடாத சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் அண்ணா நீங்க எங்கே இருக்கீங்க என்று சொல்லுங்கள், நான் உடனே நான் அங்கே வந்து உங்கள் காலில் விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகார்த்திகேயன் எவ்வளவோ டி இமானிடம் கெஞ்சியதாகவும், ஆனால் நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் நீ செய்த தவறுக்கு போய் கடவுளிடம் மன்னிப்பு கேள் என்று இமான் வேதனையுடன் சிவகார்த்திகேயனுடன் தெரிவித்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.