நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தில் சிவகார்த்திகேயன் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்லும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால், விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பதற்காகவே திட்டமிட்டு இந்த காட்சி எடுக்கப்பட்டது என விமர்சனங்கள் வந்தது. அதாவது விஜயிடம் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு,
நீங்க போங்க உங்களுக்கு நிறைய வேலை இருக்கு, இனி இதை நான் பார்த்துக்கிறேன். அதாவது உங்களுக்கு அரசியலில் நிறைய வேலை இருக்கு, இனிமே சினிமாவை உங்க இடத்தில் இருந்து நான் பார்த்துக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசுவது போன்ற வசனம் கோட் படத்தில் இடம் பெற்றிருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக விஜயவே இன்னைக்கு பின்னுக்கு தள்ளி அடித்து துவம்சம் செய்து விட்டால் சிவகார்த்திகேயன்.
ஒருவேளை இந்த நிகழ்வு முன்கூட்டியே நடந்திருந்தால் சிவகார்த்திகேயன் விஜய்யுடன் அந்த சிறிய காட்சியில் நடிக்க சென்று இருக்க மாட்டார் என்று கூட சினிமா வட்டாரங்கள் பேசப்படுகிறது, அந்த அளவிற்கு அமரனின் படம் வசூல் மூலம் விஜய் பின்னுக்கு தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது கோட் படத்தை விட அமரன் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது என்று சமீப நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில்,
உலக அளவில் கோட் படம் 400 கோடிக்கு மேல் வசூல் பெற்றுள்ளது, ஆனால் அமரன் 300 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. அந்த வகையில் அமரனுக்கும் கோட்டுக்கும் இடையில் சுமார் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ள நிலையில், இதில் எந்த விதத்தில் விஜயை பின்னுக்குத் தள்ளினார் சிவகார்த்திகேயன் என்பது பலருக்கும் குழப்பம் இருக்கின்றது. ஆனால் அதன் புள்ளிவிவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது இதுவரை கோர்ட் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே மூன்று லட்சம் என்றும், ஆனால் அமரன் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் பார்த்தவர்கள் ஒரு கோடியே 16 லட்சம் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்த வகையில் விஜய் நடித்த கோட் படத்தை விட சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை 13 லட்சதுக்கு அதிகமானோர் பார்த்துள்ளார்கள் என்கின்றது புள்ளி விவரம்.
அந்த வகையில் அதிக மக்கள் அமரன் படத்தை பார்த்தும் ஏன் அமரன் படத்தை விட கோர்ட் அதிக வசூல் வசூலை பெற்றது என்பதற்கான விளக்கமும் தற்பொழுது கிடைத்துள்ளது. அதாவது கோட் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் பல திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகரித்து விற்கப்பட்டது, ஆனால் அமரன் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் தற்பொழுது வரை ஒரே விலையில் தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமரன் படத்தை போன்று கோட் படமும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அமரன் படத்தை விட குறைவான வசூலை தான் கோட் திரைப்படம் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் அமரன் படத்தின் மூலம் சினிமாவில் வசூலில் நம்பர் ஒன்றாக இருக்கும் விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் 300 கோடி 400 கோடி வசூலுக்கு முட்டி மோதி, இதுக்குள்ளேயே நான் பெரிய ஆளா.? நீ பெரிய ஆளா.? என்கின்ற சண்டை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில், அட தமிழ் நடிகர்களே கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க என்று தெலுங்கு சினிமா துறையைச் சார்ந்தவர்கள் ஆயிரம் கோடி 2000 கோடி என்று வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.