சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் அதனுடைய ஷேர் சுமார் 70 கோடியை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஷேர் எவ்வளவு வருதோ அதுவே ஒரு நடிகரின் சம்பளமாக மாறிவிடும், இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் புறநானூறு படத்தில் அவருக்கு 70 கோடி சம்பளம் பேசப்படும் என பரவலாக அரசல் புறசலாக வெளியானது.
ஆனால் அந்த தகவலை தற்பொழுது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் 70 கோடி ரூபாய் சம்பளம் சிவகார்த்திகேயன் வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விசாரித்ததில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளமே வாங்கவில்லை என்றும், அதாவது இந்த படத்தில் வரும் லாபத்தில் தனக்கு இத்தனை பெர்ஸண்டஜ் பங்கு தர வேண்டும் என்று தான் பேசி தான் இதில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தெலுங்கு சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் ரெவன்யூ ஷேர் அடிப்படையில் தான் ஒப்பந்தம் செய்து சம்பளம் வாங்காமல் நடித்து வருகிறார்கள். இதனால் பல கோடி லாபமும் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு வெறும் பத்து கோடி மட்டும் தான் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
பாக்கி படம் வெளியாகி அதில் வரும் ரெவென்யுவில் சிவகார்த்திகேயனுக்கு எத்தனை பர்சன்டேஜ் என கணக்கிடப்பட்டது போன்று சிவகார்த்திகேயனுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே போன்று இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா மற்றும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி ஆகியோருக்கும் இதேபோன்று சம்பளம் ஏதும் வாங்காமல் ரெவென்யு சேர் அடிப்படையிலேயே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புறநானூறு படத்தின் பட்ஜெட் 162 கோடி க்கு ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் சுதா கொங்கராவே, இந்த படத்தை எடுத்து கொடுக்க இருக்கிறார், அந்த வகையில் தயாரிப்புத் துறையில் சுதா கொங்கார மகள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவர் பல படங்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் சுதா கொங்கார மகள் அனுபவத்தை வைத்து புறநானூறு படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஃபர்ஸ்ட் காபியில் தயாரித்து கொடுக்கவும் சுதா கோங்கரா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.