வெறும் 10 ஆயிரம் ரூபாய்… மேஜர் முகுந்தன் சென்று இருக்க மாட்டார்… அமரன் முகுந்த்னின் உண்மை சம்பவம்…

0
Follow on Google News

மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்து அவருக்கு இறுதிச்சடங்கு நடந்தபோது அவருடைய மகளுக்கு வயது 3. இறுதிச் சடங்கில் தந்தையை பார்த்த அவருடைய மகள் அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். எப்போதும் தன்னுடைய தந்தை மிலிட்டரிக்கு சென்று விட்டால் அவர் விரைவில் வருவார் என்று காத்திருந்த அவருடைய மகள். வழக்கம் போல் தந்தை ராணுவத்தில் இருந்து வருவார் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தவர்.

தன்னுடைய தாயிடம் அப்பா எங்கே என்று கேட்டபோது வழக்கம்போல் அப்பா ஆபீஸ் போயிட்டு வந்துருவார் என்று சொல்லும் அம்மா, இந்த முறை அப்பா கடவுள் இருக்கக்கூடிய ஆபீசுக்கு சென்று விட்டார். இனிமேல் திரும்ப வரவே மாட்டார் என்று சொல்லி தன்னுடைய மூன்று வயது மகளை மெல்ல மெல்ல தேற்றி இருந்திருக்கார் அந்த தாய்.முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்த அந்த போரிற்கு செல்வதற்கு முன்பு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மூன்று எதிரிகள் இருக்கும் இடம் குறித்த தகவல் வருகிறது. உடனே அவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது அங்கே இருந்த ராணுவ வீரர்களிடம் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் வரவேண்டாம். இங்கே இருங்கள் ஒரு டீ போட்டு வையுங்கள், நாங்கள் சண்டையிட்டு திரும்ப வந்து குடிக்கிறோம், என்று சொல்லிவிட்டு மேஜர் முகுந்த் வரதராஜன் உட்பட ராணுவ வீரர்கள் செல்கிறார்கள்.

எதிரிகள் இருக்கும் இடத்தில் ராணுவத்திற்கும் எதிரிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது, ஒரு எதிரி மரணம் அடைந்து விடுகிறார் முகுந்த் வரதராஜனின் நெருங்கிய நண்பரான மற்றொரு ராணுவ வீரர் விக்ரம் சிங் இந்த எதிரிகளுக்கு இடையில் நடந்த சண்டையில் மரணம் அடைந்து விடுகிறார். ஒரு எதிரியை சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று திரும்பி முகுந்த் வரதராஜன் வந்திருக்கலாம்.

ஆனால் என்னுடைய நண்பன் விக்ரம் சிங் மரணத்திற்கு காரணமான மீதம் இருக்கும் அந்த இரண்டு எதிரிகளை சுட்டு வீழ்த்தாமல் திரும்ப மாட்டேன் என்று முன்னேறி செல்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். அந்த இரண்டு எதிரிகளையும் சுட்டு வீழ்த்துகிறார் முகம் வரதராஜன். வீழ்த்தி விட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்பு முகுந் வரதராஜன் மயங்கி விடுகிறார். அப்போதுதான் தன் உடலில் மூன்று புல்லட் பாய்ந்திருக்கிறது என்பது அவருக்கு தெரிய வருகிறது.

பாதுகாப்பாக ஜாக்கெட் என அனைத்தும் அணிந்திருந்தும் மூன்று புல்லட் தன் உடலில் பாய்ந்து வீர மரணம் அடைந்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அந்த வகையில் இன்று தேசியக்கொடி பட்டொலி வீசி பறக்கிறது என்றால் காற்றின் காரணமும் இல்லை, ஒவ்வொரு ராணுவ வீரனின் மூச்சுக்காற்றால் தான் பறக்கிறது என்பது மேஜர் முகூத் வரதராஜனின் வீர மரணம் ஒரு எடுத்துக்காட்டு.

மேஜர் முகுந் வரதராஜன் காமர்ஸ் படிக்கிறார், அடுத்ததாக டிப்ளமோ ஜோர்னலிஸ்ட் படிக்கிறார், அவர் மாடலிங் செல்ல வேண்டும் என்று ஆசை. இதுகுறித்து முகுந்த் வரதராஜன் தாய் அவருடைய மகன் இறந்த பின்பு முகுந்த் வரதராஜனின் தந்தையிடம் கேட்டிருக்கிறார், தன்னுடைய மகன் மாடலிங் செல்வதற்காக பத்தாயிரம் கேட்டார் அப்போது நீங்கள் கொடுத்திருந்தீர்கள் என்றால் மகன் ராணுவத்திற்கு சென்றிருக்க மாட்டார்.

தன்னுடைய உயிரை விட்டிருக்க மாட்டார் என்று கண்கலங்கி மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தையிடம் கேட்டுள்ளார். முகுந் வரதராஜனுக்கு இனிப்பு என்றால் மிக பிடிக்கும் என்பதால் அவருடைய தாய் மகன் எப்போது எல்லாம் விடுமுறையில் வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் இனிப்பு செய்து கொடுப்பார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இனிப்பு செய்வதையே விட்டுவிட்டார் முகுந் வரதராஜனின் தாய் , இப்படி ஒரு வீர தமிழனை பற்றி மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்