சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் ஆரம்ப கட்டத்தில் தயாரிப்பாளராக ஆர்டி ராஜா இருந்தார். அதன் பின்பு சில பிரச்ச்னைகளால் இந்த படத்தின் உள்ளே கே.ஜி.ஆர் ராஜேஷ் உள்ளே வந்தார். இதில் அயலான் படம் தயாரிப்பாளர் கே ஜி ஆர் ராஜேஷ், இவர் டாக்டர் படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான்.
டாக்டர் படம் ரிலீஸ் போது, கே ஜி ஆர் ராஜேஷ் வெளியில் வாங்கிய 27 கோடி ரூபாய் கடன் பிரச்சனையால் டாக்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கே.ஜி.ஆர் ராஜேஷ் வாங்கிய 27 கோடி ரூபாய் கடனை ஏற்று கொண்டு சிவகார்த்திகேயன் கையெழுத்திட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் வெளியான பின்பு சிவகார்த்திகேயன் ஏற்று கொண்ட கடன் தொகையை கே.ஜி.ஆர்.ராஜேஷ் திரும்ப தரவில்லை.
இந்தநிலையில் டாக்டர் படம் பஸ்ட் காப்பி எடுத்து கொடுக்க 55 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனிடம் பேசிய கே.ஜி.ஆர்.ராஜேஷ் கடைசி கட்டத்தில் பண கஷ்டத்தில் இருப்பதாக 10 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் டாக்டர் படத்தின் பாக்கி தொகை 10 கோடி ரூபாய், மற்றும் ஏற்று கொண்ட கடன் தொகை 27 கோடி ஆக மொத்தம் 37 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான், அயலான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சிவகார்த்திகேயன் கே.ஜி.ஆர்.ராஜேஷ்யிடம் தெரிவித்ததால் அயலான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கே.ஜி.ஆர்.ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் அயலான் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் தற்பொழுது வெளியாகியுள்ள போஸ்டரில் RD ராஜா மற்றும் கே.ஜி.ஆர்.ராஜேஷ் இருவரின் பெயரும் இடம்பெற்று உள்ளது.
இந்நிலையில் அயலான் படம் தொடங்கப்பட்ட போதே, அந்த படத்தின் டிஜிட்டல் ரயிட்ஸ், ஹிந்தி டப்பிங் என வியாபாரத்தை சசுமார் 7 வருடங்களுக்கு முன்பே வியாபாரம் செய்து விட்டார் RD ராஜா. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் சன் டிவி வாங்கியுள்ளது, இந்நிலையில் சுமார் 7 வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தின் டிஜிட்டல் மற்றும் ஹிந்தி டப்பிங் போன்றவற்றை அன்றைய நிலவரப்படி மிக குறைந்த விலைக்கு வியாபாரம் நடந்துள்ளது.
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் ஏற்கனவே விற்பனை செய்த விலையை விட சுமார் 10 மடங்கு அதிகம் என்பதால்பல கோடி அயலான் படத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.