நன்றி கெட்ட வடிவேலுவுக்கு சிவகார்த்திகேயன் கற்று கொடுத்த பாடம்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

மதுரையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அன்றாட தின கூலிக்கு வேலை செய்து வந்தவர் நடிகர் வடிவேலு. சென்னையில் உள்ள ராஜ்கிரன் அலுவலகத்தில் எடுபுடி வேலைக்கு சேர்ந்த வடிவேலு. ராஜ்கிரண் தயவால் சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இதனை தொடர்ந்து விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், கோவில் காளை படத்தில் நடிக்க மதுரை காரர் வடிவேலு என்பதால் அதே மதுரையை சேர்ந்த விஜயகாந்த் இந்த வாய்ப்பை பெற்று தந்தார்.

சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை பெற்றார் நடிகர் வடிவேலு அப்போது இருந்த கவுண்டமணி , செந்தில் போன்ற நகைசுவை நடிகர்களை பின்னுக்கு தள்ளி அதிகம் சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகரானார். இந்த கால கட்டத்தில் படம் தயாரித்து நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார சிக்கலில் இருந்து வந்த ராஜ்கிரணை சந்தித்து அவர் கேட்காமலே ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார் வடிவேலு.

இதை சினிமா துறையில் உள்ள பலரிடம் ராஜ்கிரண் பண கஷ்டத்தில் இருக்கிறார், நான் தான் 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளேன் என பரப்பி விட்டு, தனக்கு தானே விளம்பரம் தேடி கொண்டார் வடிவேலு. இது ராஜ்கிரணுக்கு மிக பெரிய அவமானத்தை பெற்று தந்தது. மேலும் நான் அவனிடம் பணமே கேட்க வில்லை, அவனாக வந்து பணம் கொடுத்து தற்பொழுது அதை வெளியில் சொல்லி என்னை அசிக்கப்படுத்திவிட்டான் என தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார் ராஜ்கிரண்.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் பாடல் எழுதி வருகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபி குத்து பாடல் மிக பெரிய ஹிட் கொடுத்தது. சினிமா படங்களுக்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன் அதனால் கிடைக்கும் சம்பள தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுத்து உதவி வருகிறார். ஆனால் இதை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் இது குறித்து சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆமாம் .. நான் உதவி செய்து வருகிறேன். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகன் நான். அவர் இறந்த போது அவருக்கு மரியாதை செலுத்த சென்றேன். அப்போது அவருடைய மகள் என் அருகில் அமர்ந்து இருந்தார். குழந்தைகளை பார்க்கும் போது, என் மனது வேதனையாக இருந்தது, அதனால் உதவி செய்து வருகிறேன்.

தயவு செய்து இதை செய்தியாக வெளியிட வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சினிமா துறையினர். ராஜ்கிரண் விவகாரத்தில் வடிவேலு நன்றி உணர்வு இல்லாமல் நன்றி கேட்ட தனமாக தான் செய்த உதவியை தம்பட்டம் அடித்து விளம்பரம் செய்துகொண்டார். அப்படிப்பட்ட வடிவேலு நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து கற்று கொள்ள வேண்டும் என சினிமா துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?