சென்னை : தனியார் டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வைக்கண்டு பிரபல தமிழ் இயக்குனர்கள் அவரை காமெடியனாக தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் வந்தா ஹீரோவா தான் வருவேன் என கூறிய சிவகார்த்திகேயன் சொன்னதுபோலவே மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
ஆரம்பகாலத்தில் தனுஷுடன் இருந்த நட்பு காரணமாக தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலை ஏற்றிருந்தார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் நட்புரீதியாக விலகிவிட்டனர். அதை ஒரு பொதுமேடையிலேயே தனுஷ் கூறியிருந்தார். அந்தநேரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
அதிலிருந்து சிவகார்திகேயனின் மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது. இவரின் படங்கள் அனைத்தும் பெண்களையும் கல்லூரி இளசுகளையும் குறிவைத்தே எடுக்கப்பட்டிருக்கும். தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டான் திரைப்படம் கூட இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஒப்பந்தமாகும்போதே மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் SK 22 படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். SK 21 மற்றும் SK 22 இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலையில் கியாரா அத்வானி அல்லது சமந்தா ஜோடியாகலாம் என படக்குழு கூறியுள்ளது. ஏற்கனவே மடோன் அஸ்வின் இயக்கி நடித்து வெளிவந்த மண்டேலா திரைப்படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றிருந்ததுடன் கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.