தன்னுடைய இக்கட்டான சூழலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு உதவியாக இருந்து, ஏணியாக இருந்து ஏற்றி விட்டவர்கள் செய்த உதவியை மறந்து கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நன்றி மறந்து சிவக்கார்த்திகேயன் செயல்பட்டு வருவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடியனாக இருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாண்டியராஜ்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் டாப் ஹீரோவாக வந்த பின்பு சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க பாண்டிராஜ் கால்ஷீட் கேட்டு,நடையா நடந்து சில வருடம் காத்திருப்புக்கு பின்பு தான் எங்க வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜ்க்கு கிடைத்தது. அதேபோன்று ஒரு காமெடி மெட்டீரியலாக இருந்த சிவகார்த்திகேயனை எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோ மெட்டீரியலாக மாற்றிய முக்கிய பங்கு அப்ப படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு உண்டு.
எதிர்நீச்சல் பட வெற்றிக்கு பின்பு மீண்டும் ஒரு படம் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் கால் சீட் கேட்டார் தனுஷ், ஆனால் அதற்கு சிவகார்த்திகேயன் சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்ததின் காரணமாக, சிவகார்த்திகேயன் – தனுஷ் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது.
சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் மிக பெரிய ஹிட் கொடுத்து டாப் ஹீரோ வரிசையில் கொண்டு சென்று உட்கார வைத்த படம், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்த படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்கள் தான், ஆனால் தற்பொழுது சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள இயக்குனர் பொன்ராம் மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனிடம் கால் கேட்டு எந்த ஒரு பதிலும் கிடைக்காமல், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்கும் முயற்சியை கைவிட்டு விட்டார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தை தயாரித்தவர் எஸ்கே மதன், இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஐம்பது லட்சம் சம்பளம் பேசப்பட்டு கொடுக்கப்பட்டது. படம் மிகப்பெரிய ஹிட் அடித்து நல்ல வசூலையும் தயாரிப்பாளர் எஸ் கே மதனுக்கு பெற்று தந்தது. இதனால் பல மடங்கு லாபம் எஸ்கே மதனுக்கு கிடைத்தது.
உடனே சிவகார்த்திகேயனை அழைத்து தானாகவே முன்வந்து அவருக்கு மேலும் ஒன்றரை கோடி ரூபாய் அந்த படத்தில் நடித்ததற்காக கூடுதல் சம்பளம் கொடுத்து மொத்தம் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார் எஸ் கே மதன். அதுமட்டுமின்றி அதுவரை சிவகார்த்திகேயன் பழைய காரில் வருவதை பார்த்த தயாரிப்பாளர் எஸ் கே மதன் விலை உயர்ந்த ஆடி கார் ஒன்றையும் பரிசாக சிவகார்த்திகேயனுக்கு வழங்கினார்.
இந்நிலையில் தற்பொழுது தயாரிப்பாளர் எஸ் கே மதன் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சிரமத்தில் இருப்பதால், சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு தன்னுடைய தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கால்ஷீட் கொடுத்தீர்கள் என்றால், என்னுடைய பிரச்சனை தீர்ந்துவிடும் என கேட்க அதற்கு சிவகார்த்திகேயன் உறுதியான பதில் தெரியாமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மான் கராத்தே படத்தில் தானாக முன்வந்து அதிக சம்பளமும் ஆடி காரும் பரிசளித்த தயாரிப்பாளர் எஸ் கே மதனின் நன்றியை சற்று கூட நினைத்து பார்க்காமல், நன்றி உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வதா சிவகார்த்திகேயன் என்கின்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.