90 கோடி கடன்… டிமிக்கி கொடுக்கும் சிவகார்த்திகேயன்… கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி…

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, இதற்கு முன்பு யாருமே செய்யாத வகையில் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்பொழுது அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால், அங்கே இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் வியாபாரத்திற்கு மீறிய செலவை இந்த அமரன் படத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 120 கோடி வரை அமரன் பட்ஜெட் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஓடிடி நிறுவனங்களும் படம் வெளியான பின்பு, அந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கு என்பதை பொறுத்துதான் படத்தை வாங்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

அதுவுமே மொத்தமாக பணம் கொடுக்கப்படுவதில்லை தவணை முறையில் தான் அந்த படத்திற்கான பணத்தை ஓடிடி நிறுவனங்கள் தருகிறது, இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் திரைப்படம் குறித்து இதுவரை மிக பெரிய அளவில் பேசப்படாமல் அமைதியாக இருந்து வருவதற்கு, இந்த படத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்து அதுவே இந்த படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பட குழுவினர் சற்று அடக்கி வாசிப்பதாகவும்,

அதே நேரத்தில் இந்த படம் ஒரு ராணுவம் கதை சார்ந்தது என்பதால் இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை, அந்த வகையில் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது படம் வெளியான பின்பு தான் தெரியும். மேலும் சிவகார்த்திகேயன் மீது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒவ்வொன்றும் வெளியாகும் போது அவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு ஏதேனும் பிரச்சனை வருமா என சினிமா வட்டாரத்தில் பேசியபோது, சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தான் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள்.

அதே நேரத்தில் சொந்தமாக படம் எடுத்தால் கடன் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்கிறார்கள், என்று தன்னுடைய பினாமி மூலம் சிவகார்த்திகேயன் கடங்காரர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் படம் எடுத்து தப்பிக்கலாம் என்று பார்த்தாலும், ஆனால் சிவகார்த்திகேயன் தான் இந்த பினாமி பின்னால் இருக்கிறார் என்று எளிதாக கண்டுபிடித்து அந்தப் படத்திற்கும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள்.

ஆனால் அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், இதில் சிவகார்த்திகேயன் சம்பளத்துக்கு மட்டும் தான் நடிக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக 90 கோடி ரூபாய் கடன் இருந்ததாகவும் அந்த கடனை எல்லாம் அவர் செட்டில் செய்து விட்டு கடைசியாக அயலான் படத்தில் பிரச்சனை மட்டும் தான் தற்போது வரை தொற்றிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அந்த பிரச்சனையும் கூட அமரன் படத்திற்கு வராது என்றும் அடுத்த சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அல்லது அவர் பினாமி மூலம் தயாரிக்கும் படங்களுக்கு தான் அவர்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் சிவகார்த்திகேயனின் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் மற்றும் இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் ஒரு படம் என்று,

பெரும் இயக்குனர்களுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன் அந்த வகையில் மேலும் சுதா கொங்காரா இந்த படத்திற்கு வேறு ஒரு நடிகரை மாற்றி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி சிவகார்த்திகேயன் அந்த படத்தில் இடம்பெற்றதாக தகவல் வருகிறது. அந்த வகையில் விஜய் அரசியலுக்கு போக இருப்பதால் அந்த இடத்தை அடைவதற்கு பக்காவா காய் நகர்த்தி வருகிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்