கைது வரை சென்று தப்பித்த சிவகார்த்திகேயன்…. மலேசியாவில் சிக்கிய சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாவீரன், இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன், சமீபத்தில் மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தன்னுடைய பட குழுவினருடன் மலேசியா சென்றிருந்தார். பொதுவாக வெளிநாடுகளில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சியை அந்த நாட்டில் அந்த படத்தை வாங்கி வெளியிடும் நபர்கள் தான் ஏற்பாடு செய்வார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் அவருக்கும் நெருக்கமான சிலர் மூலம் மலேசியாவில் நடைபெறும் புரொமோஷன் நிகச்சி ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் நிகச்சியை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்கள் பல்வேறு குளறுபடியை செய்த சம்பவம் மிக பெரிய சிக்கலை சிவகார்திகேயனுக்கு ஏற்ப்படுத்தியது, மலேசியா ப்ரோமோஷன் நிகழ்ச்கிக்கு சென்ற சிவகார்த்திகேயனை மலேசியா விமான நிலையத்தில் இருந்து வரவேற்று அழைத்து செல்ல கூட ஆட்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

மேலும், பொதுவாக இந்தியாவில் இருந்து ஒரு நடிகர் மலேஷியா சென்றால் அவர்களை வரவேற்க்க விலை உயர்ந்த கார் வரிசை கட்டி நிற்கும், ஆனால் சிவகார்த்திகேயனை அழைக்க அப்படி ஏதும் கார் ஏற்பாடு செய்யாததால், விமான நிலையில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். மேலும் உயர் தர நச்சத்திர ஓட்டலில் தங்க கூடிய நடிகர்களுக்கு சாதாரண ஓட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மலேசியா சட்டப்படி பல வகையான விசாக்கள் உள்ளது, அதில் காலிங் விசா மற்றும் சுற்றுலா விசா என இரண்டு வகைகள் உண்டு. சுற்றுலா விசாவில் செல்கின்றவர்கள், மலேசியாவை சுற்றி மட்டுமே பார்க்க முடியும், மற்ற எந்த வேலையையும் செய்ய கூடாது, ஆனால் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்ல கூடியவர்கள் காலிங் விசாவில் செல்ல வேண்டும், அப்படி காலிங் விசாவில் சென்றால் மட்டுமே அவர்கள் மேடைகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க்க முடியும்.

இந்நிலையில் டூரிஸ்ட் விசாவில் சென்ற சிவ கார்த்திகேயன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தயாராக இருந்தபோது, இந்த தகவல் மலேசியா குடிநுழைவு துறை அதிகாரியின் கவனத்திற்கு சென்றுள்ளது, உடனே சுமார் 20க்கு மேற்பட்ட அதிகாரிகள் சிவகார்த்திகேயன் இருக்கும் இடத்திற்கு சென்று, அவருடைய விசாவை பரிசோதனை செய்தததாக கூறப்படுகிறது.

மேலும் நீங்கள் டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளீர்கள், நீங்கள் மலேசியாவை சுற்றி மட்டுமே பார்க்க முடியும், இது போன்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியை வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம்,ஆனால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் ஏறி பேசினால், மலேசியா சட்டப்படி உங்களை நாங்கள் கைது செய்ய நேரிடும் என சிவகார்த்திகேயனை எச்சரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எவ்வளவோ அதிகாரிகளிடம் பேசியுள்ளார், அப்போது அங்கிருந்த மலேசியாவை சேர்ந்த இந்திய அதிகாரி ஒருவர், சார் நான் உங்களுடைய ரசிகர், ஆனாலும், இங்கே சட்டப்படி தான் எங்களால் செயல்பட முடியும், அதனால் நீங்கள் டூரிஸ்ட் விசாவில் வந்து இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது சட்டபடி தவறு என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றால், கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில். ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல்,இறுதியாக பிரஸ் மீட் மட்டும் ஏற்பாடு செய்து அதில் மட்டும் பேசிவிட்டு திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விசா குளறுபடி காரணமாக கைது வரை சென்று, கடைசி நேரத்தில் தப்பித்து வந்த சிவகார்த்திகேயன் நிலை மிக பரிதாபமாக உள்ளது என்கிறார்கள், இந்த சம்பவம் அறிந்தவர்கள்.