பணத்தை அடிசுட்டு போய்ட்டான்… சிவகார்த்திகேயன் என்னானு கூட கேட்கல.. சோகத்தில் முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் போதே தன்னுடைய நகைச்சுவை பேச்சுகளால், அவருக்கென ஒரு தனி ரசிகர்களை ஏற்படுத்தினார் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால் மெரினா படத்திற்கு முன்பாகவே அவரை முதன் முதலில் சினிமாவில் ஹீரோவாக்கியது நான்தான் என்று பிரபல நகைச்சுவை நடிகரும் உதவி இயக்குனருமான செம்புலி ஜெகன் என்பவர் தெரிவித்துள்ளார். செம்புலி ஜெகன் 80 களின் காலகட்டத்தில் விஜயகாந்த், சத்யராஜ் ,பிரபு ,ரஜினி ஆகியோரின் படங்களில் ஒரு முக்கிய காமெடி நடிகராக நடித்திருப்பார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் செம்புலி ஜெகன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனை பற்றி பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் கஷ்டங்கள் எல்லாரையும் போலவும் நானும் அனுபவித்தேன். எல்லாரை போல, வண்டி வாங்கணும், வீடு வாங்கணும் என்கிற ஆசை எனக்கும் இருக்கு. ஆனால், வாங்க முடியவில்லை. எனக்கு அது அமையவில்லை.

தனியா படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது. அதை என் கூட இருந்த ஆளு, மிஸ்யூஸ் பண்ணிட்டார். சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கும் போது, மருத்துவமனையில் நடக்கும் ஒரு கதைக்காக அவரை நடிக்க முதன் முதலில் அழைத்தது நான் தான். மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுக்க ரெடி பண்ணிட்டேன். அதற்காக நான் ஒரு தேதியை சொன்னேன். அன்று தான் சிவகார்த்திகேயன் நிச்சயதார்த்தம்.

அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்ததால், திருச்சியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் அவசரமாக வந்து சேர்ந்தார் சிவகார்ததிகேயன். அப்புறம் மேக்கப் எல்லாம் போட்டு, ஷூட் எடுத்துட்டோம். இதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, கூட இருந்த ஆள் 30 லட்சம் ரூபாயை அடிச்சிட்டு போய்ட்டான். 15 நாள் ஷூட் நடந்தது. சிவகார்த்திகேயன் அதன் பின் ஷூட்டுக்கு வரவில்லை. எந்த தகவலும் இல்லை. இது நாள் வரை அது பற்றி சிவகார்த்திகேயன் கேட்கவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை என செம்புலி ஜெகன் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜயகாந்த் மற்றும் பாக்கியராஜ் பற்றி செம்புலி ஜெகன் பேசுகையில், இன்று டெக்னாலஜி வளர அன்றே விதை போட்டவர் விஜயகாந்த் சார் தான். தவசி, நரசிம்மா, பதவிப்பிரமாணம் படங்களில் கேப்டனுடன் நடித்துள்ளேன். ஓய்வே எடுக்க மாட்டார். காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால், சரியாக மெக்கப் போட்டு உட்கார்ந்திருப்பார்.

பாக்யராஜ் சாரை பார்க்க வந்தாலே, ‘ஜெகன் இருக்கானா..’ என்று கேட்டுக் கொண்டு தான் உள்ளே வருவார். பாக்யராஜ்-விஜயகாந்த் சாருக்கு நான் தான் தொடர்பு கருவியாக இருந்தேன். கன்னிப்பருவத்திலேயே படத்தில் ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு விஜயகாந்தை தான் பாக்யராஜ் சிபாரிசு செய்தார். ஆனால், பாரதிராஜா சார் சொல்லி ராஜேஷ் சார் செலக்ட் ஆகிட்டார். இதை விஜயகாந்த் சாரே என்னிடம் சொல்லியுள்ளார்.

‘என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டு நாலு இடத்திற்கு கூட்டிட்டு போனவருய்யா உங்க டைரக்டர்’ என்று என்னிடம் விஜயகாந்த் சார் சொல்லிருக்கார். பழைய ஜாவா புல்லட்டில் பாக்யராஜ்-விஜயகாந்த் இருவரும் நிறைய பயணம் செய்துள்ளனர் என பல சுவாரசிய தகவல்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் செம்புலி ஜெகன் .