ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : ரஜினிகாந்த் என்றாலே எப்போதும் துள்ளலும் பரபரப்பும்தான். அதிலும் அவர் நடிக்கும் திரைப்படம் தயாராகும்போதே ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிடுவார்கள். அதற்கேற்றாற்போல அவரது திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே நியூஸ் சேனல்கள் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு ரசிகர்களை மேலும் குஷிப்படுத்துவார்கள்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் தலைவர் 169. இந்த படத்தில் திரையாக்கத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இருவர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு பிளாஷ்பேக் காட்சி வருகிறது. இந்த பிளாஸ்பேக் தான் படத்தின் முக்கிய திருப்புமுனை என கூறப்படுகிறது. இந்த பிளாஷ் பேக்கில் சிறு வயது ரஜினியாக நடிக்க முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.அதேபோல இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து சிவராஜ்குமார் கூறுகையில் ” நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பதே எனது நீண்டகால ஆசை. நிறைவேறுமா என காத்திருந்தேன். நடக்குமா என தெரியவில்லை. தற்போது தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்னால் இன்னும் நம்பமுடியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பேட்ட படத்தின் பாடல்களை ஹிட்டடித்துக் கொடுத்த அனிருத் இசையமைக்கிறார். மேலும் இணையத்தில் பேன் மேட் போஸ்டர் ரிலீசாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ஜெயிலர் என பெயர் சூட்டப்பட்டு கோட் சூட்டுடன் ரஜினி பந்தாவாக ஸ்டைலாக நிற்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

நோ… ஹனிமூன்… நயன்தாரா அதிரடி முடிவு… சோகத்தில் விக்னேஷ் சிவன்….என்ன பிரச்சனை தெரியுமா.?