நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முகுந் வரதராஜன் வீர மரணம் அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தன்னுடைய தந்தையிடம் கடைசியாக அவர் தொலைபேசியில் பேசுகிறார். அப்போது நான் அடுத்து சில நாட்கள் விடுமுறை எடுத்து வருகிறேன், முழுக்க முழுக்க குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கப் போகிறேன்.
இது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரிய வேண்டாம் ஒரு சர்ப்ரைஸ் கிப்டாக இது இருக்கட்டும் என்று தன்னுடைய தந்தையிடம் தொலைபேசியில் மேஜர் முகுந் வரதராஜன் பேசிய அந்த கடைசி உரையாடலுக்கு அடுத்த பத்து நாட்களில் அவருடைய தந்தைக்கு அவருடைய சம்பந்தி, அதாவது மேஜர் முகுந் வரதராஜனின் மனைவி இந்துவின் அப்பா தொலைபேசியில் அழைக்கிறார். மருமகன் முகுந் வரதராஜன் வீர மரணம் அடைந்து விட்டார் என்ற ஒரு தகவலை தெரிவிக்கிறார்.
அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை, தன் மகனுக்கு ஏதும் ஆகி இருக்காது என்கின்ற ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பேப்பரை பார்க்கிறார். முதல் பக்கத்தில் மகன் குறித்து எந்த செய்தியும் இல்லை, ஒரு நிம்மதி பெருமூச்சு. அடுத்து அதே பேப்பரில் நான்காவது பக்கத்தில் தமிழன் மேஜர் முகுந் வரதராஜன் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு மரணம் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை பார்த்து கண் கலங்கி போய்விட்டார் வரதராஜனின் தந்தை.
மேஜர் முகுந் வரதராஜன் தன்னுடைய மனைவியை காதலித்து கரம் பிடித்தவர், எட்டு வருட காதல், ஐந்து வருட திருமண வாழ்க்கை, அவர் வீர மரணம் அடையும்போது அவருக்கு மூன்று வயதில் குழந்தை, ஒருமுறை விடுமுறையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு வருகிறார். அப்போது அவரால் அதிக கனமான பொருட்களை தூக்க முடியவில்லை. அதற்கு முகுந் வரதராஜன் மனைவி இந்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.?
அதற்கு புல்லட் தன்னுடைய தோள்பட்டையில் உரசி விட்டு சென்று விட்டது அதனால் அதிக வேட்டை தூக்க முடியவில்லை என்று முகுந்த் வரதராஜன் தெரிவிக்க, கண்கலங்குகிறார் அவருடைய மனைவி, உடனே முகுந் வரதராஜன் தன்னுடைய மனைவியை பார்த்து நீ மேஜர் முகுந் வரதராஜனின் மனைவி. நீ அழக்கூடாது என்கின்றார், நீ அழுதா எனக்கு பிடிக்காது என்று தன்னுடைய மனைவிக்கு தைரியம் ஊட்டுகிறார் முகுந்த் வரதராஜன்.
அதே தைரியத்துடன் இருந்த அவருடைய மனைவி இந்து, வீர மரணம் அடைந்த முகுந்து வரதராஜனுக்கு அசோகச் சக்கர விருது வழங்கப்படுகிறது. அப்போது ஒரு சின்ன துணி கூட கண்ணீர் விடாமல் அந்த விருதை வாங்கிய இந்து, நான் அழுதால் என்னுடைய கணவருக்கு அது பிடிக்காது, அதனால் நான் அழ மாட்டேன். நான் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி என்ற அதே கெத்துடன் அந்த விருதை வாங்கிச் சென்றார்.
முகுந்த் வரதராஜன் மரணம் அடையும் பொழுது அவருடைய மனைவி இந்துக்கு 35 வயது அப்போது அவருடைய மாமனார் உனக்கு சிறிய வயது நீ மறுமணம் செய்து கொள்ளுமா.? என்று சொன்னபோது முடியவே முடியாது என்று மறுத்தவர், தன்னுடைய காதல் கணவன் வீரம் மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் நினைவோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முகம் வரதராஜனின் மனைவி இந்து.
முகுந் வரதராஜன் ராணுவத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அந்த ட்ரெயினிங் அவருக்கு ஆஸ்துமா பிரச்சினை, ஸ்கின் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அப்போது அவருடைய சகோதரி உனக்கு இந்த மிலிட்டரி வேண்டாம் விட்டுவிடு, உன் உடம்பு தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறதே.! என்றெல்லாம் எவ்வளவோ சொல்லியும் எனக்கு ராணுவத்தில் சேர்வது தான் லட்சியம் என்று தன்னுடைய குடும்பத்தினர் எவ்வளவும் சொல்லி கேட்காமல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்த முகம் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள அமரன் திரைப்படத்தை ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்த்து வீர மரணம் அடைந்த தமிழனின் வீரத்தை போற்றுவோம்.