நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் சிம்புவை காதலித்து வருவதாக அப்போது கிசு கிசு செய்திகள் வெளியானது, மேலும் சிம்பு – நயன்தாரா இருவரும் தனியாக இருக்கும் புகைப்படம் வைரலாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து சிம்பு நயன்தாரா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த காதல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.
இதன் பின்பு நடிகர் பிரபு தேவா – நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். இதில் ஏற்கனவே பிரபதேவா திருமணம் முடிந்து குழந்தை இருப்பது தெரிந்தே அடுத்தவர் கணவரான பிரபுதேவாவை காதலித்து வந்தார் நயன்தாரா. இந்த காதலுக்கு எதிராக பிரபுதேவா மனைவி ரமலத் கடுமையாக எதிர்த்து வந்தார். என்னுடைய கணவரை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றும்,

மேலும் ஒரு கட்டடத்தில் நயந்தாராவை நேரில் எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என பகிரங்கமாக தெரிவித்தார் பிரபுதேவா மனைவி ரம்லத். ஆனாலும் பிரபுதேவாவை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா, சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஜோடி ஒன்றாக வந்து கலந்து கொள்வார்கள், மேலும் திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அப்போது செய்திகள் வெளியானது.
இதனை தொடர்ந்து மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த நடிகர் பிரபுதேவா தான் காதலித்து வந்த நயன்தாராவை திருமணம் செய்வதற்கு முடிவு செய்து இருவரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நயன்தாரா – பிரபுதேவா இவருடைய காதல் முடிவுக்கு வந்தது, இதனை தொடர்ந்து திருமணம் வரை சென்ற நயன்தாரா – பிரபுதேவா காதல் முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்தனர்.
பிரபு தேவாவை நயன்தாரா காதலித்து வந்த போது பிரபு தேவா பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி இருந்தார் நயன்தாரா, பிரபு தேவா உடன் பிரேக் அப் ஆனது அந்த பச்சை குத்திய பெயரை வேறு ஒரு வடிவமாக மாற்றி கொண்டார் நயன்தாரா, பிரபு தேவா உடன் பிரேக் ஆப் ஆன பின்பு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நயந்தாரா மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து நீண்ட வருட காதலுக்கு பின் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் , நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு குறித்து பேசிய பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது, அதில் போடா போடி படத்தில் மாட்டிக்கிட்டேன் என ஒரு பாட்டு வரும். அந்த பாடலை எங்களால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது, சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு, டேய் விக்கி நீ பாட்டு எல்லாம் நல்லாதான் எழுதுற, ஆனா அதுல மாட்டிக்கிட்டேன் ஒரு வார்த்தையை எழுதி, இப்ப பாரு ஒன்றரை வருடங்களாக பாடலை எடுக்க முடியவில்லை என சிம்பு தன்னிடம் தெரிவித்ததாக கூறிய விக்னேஷ் சிவன்.
மேலும், அதில் இருந்து எந்த பாடல் எழுதினாலும், கவனமாக எழுதுவேன். நான் பாடல் எழுத தொடங்கியபோது, சிம்பு சார்தான், நீ நல்லா எழுதற, நீயே பாட்டு எழுது என ஊக்குவித்தார். ஆரம்பம் படத்தில் எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் என எழுதிய பின்னர் தான், எனக்கு படம் கமிட் ஆனது. எனது வாழ்க்கையையே மாறியது என சிம்பு தனக்கு அட்வைஸ் செய்த பின்பு தான் தன்னுடைய வாழ்க்கை மாறியது என விக்னேஷ் சிவன் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.