மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு பட வாய்ப்பு இல்லாமல் சிம்பு தவித்து வந்த நேரத்தில், தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் மூன்று படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். ஐசரி கணேசன் தயாரிப்பில் மொத்தம் மூன்று படம் ஒரு படத்திற்கு எட்டு கோடி என மூன்று படத்திற்கு 24 கோடியென சம்பளம் பேசப்பட்டது. ஆனால் சிம்பு ஒரு படத்திற்கு 10 கோடி என சிம்பு கேட்க அதற்கும் ஐசரி கணேசன் ஒப்பு கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஒரு படத்திற்கு 10 கோடி விதம் 3 படத்துக்கு 30 கோடி பேசி 16 கோடி ரூபாய் சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார் ஐசரி கணேசன். இந்த நிலையில் ஐசரி கணேசனிடம் ஒப்பந்தம் செய்து முடித்த பின்பு மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்த காடு படத்தில் நடித்து விட்டு அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்தது போல் நடிக்காமல் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க ஐசரி கணேசன் முன் வந்த போது, அதற்கு சிம்பு வேண்டாம் என மறுத்து விட்டாராம். வெந்து தணிந்தது காடு படத்தில் படப்பிடிப்பில் வாங்க சிம்பு, போங்க சிம்பு என படப்பிடிப்பில் பலர் மத்தியில் கௌதம் மேனன் அழைப்பது சிம்புவுக்கு பிடிக்கவில்லையா, அதாவது தன்னை சிம்பு சார், வாங்க சார், போங்க சார் என்று சார் சொல்லி கௌதமன் கூப்பிட வேண்டும் என்கின்ற மனநிலையில் சிம்பு இருந்திருக்கிறார்.
இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பின் போது, சிம்பு – கவுதம் மேனன் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தான் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என சிம்பு மறுத்து விட்டாராம். இந்த நிலையில் ஐசரி கனேசன் வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்தால், அவர்களும் சரி இல்லை. என சிம்பு ஓவர் அட்ராசிட்டி செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஐசரி கணேசனுக்கு அல்வா கொடுத்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க கமிட்டாகி விட்டார். ஆனால் ஐசரி கணேசனிடம் செய்து கொண்ட ஒப்பந்தம்படி அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிப்பது குறித்து சிம்பு முறையான எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஐசரி கணேசனை உதாசீன படுத்தி வந்துள்ளார், டென்ஷனான ஐசரி கணேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, சிம்பு இது போல் தொடர்ந்தால் ரெட் கார்டு விதிக்கப்படும் என தயாரிப்பாளர் கவுன்சில் எச்சரித்தது.
இதனை தொடர்ந்து சிம்புவால் நமக்கெதுக்கு வம்பு என கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை எடுப்பதற்கு முன்பு, முதலில் நீ ஐசரி கணேசன் பிரச்சனையை முடித்துவிட்டு வா, என்று கமல்ஹாசன் தரப்பு சிம்புவிடம் தெரிவிக்க, மீண்டும் ஐசரி கணேசனிடம் வாலை சுருட்டி கொண்டு சரண்டராகும் சூழல் சிம்புவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் இயக்குனர் கௌதமன் இயக்கத்தில் நடிக்க தயார் என சிம்பு தெரிவித்துள்ளாராம்.
என்னப்பா உனக்கு அவருக்கும் தானே பிரச்சனை என கேட்டதற்கு, பரவாயில்லை அவர் என்னை விட வயதில் மூத்தவர் தானே, அதனால் என்னை பெயர் சொல்லி கூப்பிடுவதால் எனக்கு ஏதும் பிரச்சனை இல்லை என தெரிவித்திருக்கிறார் சிம்பு. ஆனால் ஐசரி கணேசன் தான் நேரடியாக படத்தையும் தயாரிக்க வேண்டும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்,
இந்நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தெரிவித்த பின்பு, தயாரிப்பாளர் கவுன்சில் கொடுத்த எச்சரிக்கை, அதன் பின்பு கமல்ஹாசன் தரப்பில் சிம்புவை டீல் செய்த விதம் என தொடர்ந்து சிம்புக்கு எதிராக நடக்கும் அணைத்து விஷயங்களும் மேலும் தொடர்ந்தால் மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி விடுவோம் என்கிற அச்சம் தான் சிம்புவை இப்படி மாற்றியுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.