ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது… பட வாய்ப்புகள் இல்லாமல் பரிதாபத்தில் தவிக்கும் சிம்பு…

0
Follow on Google News

குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு, கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிம்பு, அதன்பின்னர் இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளார்.இவரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்தால் அந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் எனக் கூறும் அளவிற்கு இவர்கள் கூட்டணி இருந்தது.

இடையில் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய சிம்பு, பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இரண்டும் மொக்க பிளாப்.சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட சிம்பு வேற லெவலில் இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இருந்தாலும் எஸ்டிஆர் 48 படத்தின் அப்டேட் குறித்துதான் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு அந்த படம் தொடங்கப்படுவது போல தெரியவில்லை. இதனால் சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் கமல்ஹாசன், அதிக பட்ஜெட் காரணமாக தேசிங் பெரியசாமி படத்தைக் கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசி எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவோம் என்றும் கூறிவிட்டாராம். இந்த படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை தக்லைஃப் படத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிம்பு இப்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

டைனோசர்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் சொன்ன கதை கேட்டு சம்மதம் தெரிவித்த சிம்பு, அவரை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் அனுப்பியுள்ளார். அவர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கும் சிம்பு தனக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வேண்டுமெனக் கேட்டு குட்டையைக் குழப்பி வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளில் சிம்பு கொடுத்த ஒரே ஒரு ஹிட் மாநாடுதான். ஆனால் மற்ற நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதைக் குறிப்பிட்டு தனக்கும் 50 கோடி வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம்.

இதனால் சிம்புவை கமிட் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடி வருவதால் மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கும் சூழலுக்கு தள்ளபட்டுள்ளார் சிம்பு. இதனை தொடர்ந்து படவாய்ப்பு இல்லாததால் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என பலரும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here