தமிழ் சினிமாவில் அதிக விமர்சனங்களுக்கு ஆளான ஒரு நடிகர் என்றால் அது சிம்புதான். இவர்மீது வைக்கப்படாத குற்றச்சாட்டுகளோ அல்லது விமர்சனங்களோ இல்லை எனும் அளவிற்கு சிம்பு குறித்த விமர்சன கிசுகிசுக்களும் செய்திகளும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கொட்டிக் கிடக்கின்றது. இந்நிலையில் படவாய்ப்பு இல்லாமல் சில காலம் வீட்டிலே முடங்கி இருந்த சிம்பு.
பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.
மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஒரே ஒரு பாடம் மட்டுமே ஹிட் அடித்தது படம் அட்டர் பிளாப்.. அதில் அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்டிஆர் 48 படத்தின் அப்டேட் குறித்துதான் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு அந்த படம் தொடங்கப்படுவது போல தெரியவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன், அதிக பட்ஜெட் காரணமாக தேசிங் பெரியசாமி படத்தைக் கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசி எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவோம் என்றும் கூறிவிட்டாராம்.
மேலும் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் சிம்பு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கதையின் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக அதை தங்களால் தயாரிக்க முடியாது என்று லைகா சொல்லிவிட்டதாம். அதையடுத்து அடுத்தபடியாக ஐசரி கணேசிடம் தஞ்சமடைந்தார் சிம்பு.
ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடிகளாம் அதுபோக சிம்பு கூட பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறார். இதனால் வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேசும் இந்த படத்தை கைவிட்டு விட்டார். இதனால் தனது நண்பர் மகத் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தூது விட்டிருக்கிறார். அவர்கள் வேண்டாம் என மறுக்க, அதையடுத்து அதே கதையை இப்போது தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு அனுப்பியுள்ளாராம் சிம்பு அவரும் சிம்புவை வைத்து படம் இயக்க முன் வரவில்லை.
இந்நிலையில் சிம்பு பல வருடமா பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி, மாநாடு படம் மூலம் வெற்றி கொடுத்து அடுத்தடுத்து பிளாப் கொடுத்த சிம்பு மனசாட்சியே இல்லாமல் சம்பளத்தை ஏற்றியதால் தான் அவரை வைத்து யாரும் படம் எடுக்க முன்வருவது இல்லை. மேலும் இப்படியே போனால் மீண்டும் சிம்பு வீட்டிலே பட வாய்ப்புகள் இல்லாமல் பழைய நிலைக்கு செல்ல நேரிடும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.