நடிகர் சிம்புவா.? அய்யய்யோ… அவர் வேண்டாம், அவர் ஒழுங்கா சூட்டிங் வரமாட்டார், இயக்குனர்கள் சொல்படி கேட்க மாட்டார். தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய செலவை இழுத்து விடுவார், அவரை வைத்து படம் எடுப்பதற்கு சும்மாவே இருந்து விடலாம் என்கின்ற குற்றசாட்டு சிம்பு மீது மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு இருந்தது.
இதனால் நடிகர் சிம்புவை வைத்து பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் யாரும் படம் எடுக்க முன் வராத நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் சில காலம் வீட்டிலேயே முடங்கினார் சிம்பு. இந்த நிலையில் ஏம்ம்பா சிம்பு, சும்மா தான இருக்க, பிக் பாஸ் வீட்டுக்குள்ள 100 நாள் இருந்தால் பணமாவது கிடைக்கும்ல. என சினிமா ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதத்தில், சிம்புவின் சினிமா வாழ்க்கை பரிதாபத்தில் இருந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் சிம்புவின் சினிமா வாழ்க்கை புத்துணர்வு பெற்றது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சிம்பு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டிருந்த போது. தயாரிப்பாளர் ஐ சரி கணேசன் தன்னுடைய தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்கள் நடிப்பதற்கு சிம்புவை ஒப்பந்தம் செய்து அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார்.
மேலும் மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு நடித்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் சிம்புக்கும் இடையில் இருந்த பிரச்சனையின் காரணமாக சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது அதை முன் நின்று தீர்த்து வைத்து அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு காரணமாக இருந்தவர் ஐசரி கணேசன். இந்த நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு ஒப்பந்தம் செய்தது போன்று வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்தார். ஆனால் அடுத்தடுத்து சொன்னது போல் தொடர்ந்து இரண்டு படங்கள் நடிக்க கால் சீட் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்தார்.
மாநாடு படத்தின் வெற்றி காரணமாக இதற்கு முன்பு தான் பட்ட கஷ்டங்களை மறந்து, மற்றும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி கடன் இல்லாமல் ஐசரி கணேசன் தயாரிப்பில் நடிக்காமல், கமலஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் காமிட்டானார் சிம்பு. மேலும் ஐசரி கணேசனுக்கு முறையான பதில் ஏதும் தெரிவிக்காமல் வந்த சிம்பு மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார் ஐசரி கணேசன்.
இந்த நிலையில் ஐசரி கணேசனுக்கும் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இருவருக்கும் இடையில் இருந்து வரும் நட்பு நடிகர் சிம்புவால் உடையும் அபாயம் ஏற்பட்டது. மேலும் தனக்கு டிமிக்கி கொடுத்த சிம்புவை தன்னுடைய தயாரிப்பில் கமிட் செய்த கமல் மீது வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் ஐசரி கனேசன். மேலும் ஐசரி கணேசன் கொடுத்த புகாரின் பெயரில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் கவுன்சில் ரெட் கார்ட் விதிக்கலாம் என்கிற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சிம்புவை தன்னுடைய படத்தில் கமிட் செய்ததின் விளைவாக எதற்காக ஐசரி கணேசனுடன் மனக்கசப்புக்கு உள்ளாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த கமல்ஹாசன், மேலும் சிம்புவை வைத்து படம் தொடங்கிய பின்பு, தயாரிப்பாளர் கவுசிலில் ஐசரி கணேசன் கொடுத்த புகாரின் அடைப்படையில் அந்த படத்திற்கு பிரச்ச்னை வரலாம் என்பதால் சிம்புவால் நமக்கெதுக்கு வம்பு என்கிற முடிவுக்கு கமல் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லாண்டன் சென்று திரும்பிய சிம்புவிடம் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ்ன் பட்னர் மகேந்திரன், நீங்கள் உங்கள் பிரச்சனையை முடித்துவிட்டு வாங்க, அதுக்கு பிறகு படத்தை தொடங்கலாம் என கமல்ஹாசன் தயாரிப்பில் எடுக்கப்பட இருந்த சிம்பு நடிக்கும் படத்தில் இருந்து முதலில் உன் பிரச்சனையை முடித்துவிட்டு வா, என துரத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சினிமா வட்டாரத்தினர், மாநாடு ஒரு வெற்றியை வைத்துக்கொண்டு என்ன ஆட்டம், என்ன வாய் கொழுப்பு என சிம்புவை விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.