வேறு வழியில்லை… இறக்கி வந்த சிம்பு… நன்றி மறக்காமல் உதவி செய்த கமல்ஹாசன்..

0
Follow on Google News

பல வருடங்களாக சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்த நடிகர் சிலம்பரசன் மாநாடு படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் மாநாடு படத்திற்கும் முன்பு பட வாய்ப்பு இல்லாமல் முடங்கியது மற்றும் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததை எல்லாம் மறந்துவிட்டு ஒரு படம் வெற்றியடைந்ததும் தன்னை ஓவர் நைட்டில் ஒபாமா என நினைத்துக் கொண்டு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு ஏற்றினார் சிம்பு.

தற்பொழுது 40 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று பிடிவாதமாக இருப்பதால் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சிம்பு வைத்து படம் இழக்க தயங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் சிம்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கும் சூழல் உருவான நிலையில், தற்போது இதற்கு மேல் பிடிவாதம் பிடித்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று சற்று இறங்கி வந்துள்ளார் சிலம்பரசன்.

அந்த வகையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. மேலும் சிம்புவை ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தில் கமிட் செய்ததற்கு முக்கிய காரணம் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சற்று ஓய்வு தேவைப்பட்டது.

அந்த சூழலில் சில வாரங்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு பல நடிகர்களை தொடர்பு கொண்ட போது இரண்டு வாரத்திற்கு மட்டும் என்பதால் பல நடிகர்கள் மறுத்துவிட்டார்கள் ஆனால் நடிகர் சிம்பு மட்டும் கமல்ஹாசனுக்கு உதவி செய்யும் வகையில் அந்த இடைப்பட்ட காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த வகையில் சிம்பு செய்த உதவிக்கு நன்றி மறக்காமல் தன்னுடைய தயாரிப்பில் சிம்புவுக்கு நடிக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.