மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட காலத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பதற்காக மூன்று படத்தில் கமிட்டானார். படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்த சிம்புவை, ஏன்பா சிம்பு வீட்ல சும்மா தான இருக்க 100 நாள் பிக் பாஸ் வீட்டுக்கு போனால் செலவுக்காவது காசு கிடக்கும்ல என சிம்புவை கிண்டல் செய்த காலத்தில், மூன்று பட வாய்ப்புகள் ஒரே நேரத்தில் கிடைத்தால் சும்மா விடுவாரா சிம்பு.
உடனே ஐசரி கணேசன் தயாரிப்பில் மூன்று படத்தில் கமிட்டானார் சிம்பு. ஐசரி கணேசன் தயாரிப்பில் மொத்தம் மூன்று படம் ஒரு படத்திற்கு எட்டு கோடி என மூன்று படத்திற்கு 24 கோடியென சம்பளம் பேசப்பட்டது. ஆனால் சிம்பு ஒரு படத்திற்கு 10 கோடி என சிம்பு கேட்க அதற்கும் ஐசரி கணேசன் ஒப்பு கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஒரு படத்திற்கு 10 கோடி விதம் 3 படத்துக்கு 30 கோடி பேசி 16 கோடி ரூபாய் சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார் ஐசரி கணேசன். இந்த நிலையில் ஐசரி கணேசனிடம் ஒப்பந்தம் செய்து முடித்த பின்பு மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்த காடு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, சிம்பு தன்னுடைய சம்பளத்தை திடீரென்று ஏற்றிக்கொண்டார்.
மாநாடு பட வெற்றியின் மூலம் ஐசரி கணேசன் இடம் ஏற்கனவே பழைய சம்பளத்திற்கு தன்னால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாது, அதனால் ஒரு படத்திற்கு 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் சிம்பு. ஆனால் அதற்குமே ஐசரி கணேசன் ஒப்புக்கொண்டு விட்டார். இந்த நிலையில் சிம்புவுக்கு எப்படி மூன்று படத்திற்கு ஐ சேரி கணேசன் அட்வான்ஸ் கொடுத்து இருந்தாரோ.! அதேபோன்று இயக்குனர்கள் கௌதம் மேனனுக்கும் மூன்று படத்திற்கான அட்வான்ஸ் தொகையை ஐசரி கணேசன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐசரி கணேசிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். மேலும் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்காக இருவரிடமும் ஐசரி கணேசன் கால் சீட் கேட்டு வந்த நிலையில். கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாராம் சிம்பு. இதுகுறித்து என்னவென்று விசாரித்த போது விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்பு தளத்தில் சிம்புவை கௌதம மேனன் எந்த மாதிரி ட்ரீட் பண்ணினாரோ, அதேபோன்றுதான் மாநாடு பட வெற்றிக்கு பின்பு வெந்து அணிந்த காடு படத்திலும் ட்ரீட் பண்ணி உள்ளார்.
அந்த வகையில் வாங்க சிம்பு, போங்க சிம்பு என படப்பிடிப்பில் பலர் மத்தியில் கௌதம் மேனன் அழைப்பது சிம்புவுக்கு பிடிக்கவில்லையா, அதாவது தன்னை சிம்பு சார், வாங்க சார், போங்க சார் என்று சார் சொல்லி கௌதமன் கூப்பிட வேண்டும் என்கின்ற மனநிலையில் சிம்பு இருக்கின்றார். இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பின் போது, சிம்பு – கவுதம் மேனன் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க முன் வந்தாலும் கூட, ஆனால் இயக்குனரை நான் தான் தேர்வு செய்வேன் என்றும், குறிப்பாக புதுமுக இயக்குனர்கள் வேண்டாம், பிரம்மாண்ட இயக்குனர்கள் பெரிய இயக்குனர்களை நானே தேர்வு செய்து கொடுக்கிறேன், என சிம்பு ஓவர் அட்ராசிட்டி செய்து வருவதாக கூறப்டுகிறது.
இந்த நிலையில் சிம்பு மீது உள்ள நம்பிக்கையில் ஐசரி கணேசன் எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல், வாய்மொழி ஒப்பந்தமாக மூன்று படங்களில் நடிப்பதற்கு சிம்புவை ஒப்பந்தம் செய்து அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்துள்ளது, தற்பொழுது சட்டரீதியாக சிம்பு மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் ஐசரி கணேசன் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாய்மொழி உத்தரவு என்றாலும் கூட நாக்கில் சுத்த வேண்டும். அதாவது நாம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்கின்ற நாணயம் இல்லாமல் சிம்பு நடந்து வருவது குறிப்பிடதக்கது.