சித்தார்த் நடித்தால் தோல்வி தான்… தெரிந்தே தப்பு செய்த இயக்குனர் சங்கர்…

0
Follow on Google News

தமிழில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கர் அறிமுக இயக்கத்தில் வெளியான ஜென்டில் மேன் தொடங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ் , முதல்வன் என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த சங்கர் நடிகர் சித்தார்த் அறிமுகம் செய்து அவர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் படு தோல்வியை அடைந்ததது. சங்கர் இயக்கத்தில் முதல் தோல்வி படம் இது. இதனை தொடர்ந்து தமிழில் சித்தார்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படம் தோல்வியை தழுவியது.

மிக பெரிய இரண்டு இயக்குனர் படத்தில் சித்தார்த் நடித்த இரண்டு படமும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து சித்தார்த் ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார். இதன் பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சித்தார்த் அங்கும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதன் பின்பு சில வருடங்கள் கழித்து தமிழில் கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சித்தார்த்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாத சித்தார்த் தன்னுடைய இருப்பை காட்டி கொள்ள, டிவீட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து செய்திகளில் இடம் பிடித்து வந்தார். ஒரு கட்டத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்யை மிக கடுமையாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு ஆளானார் சித்தார்த்.

அதே போன்று ஒரு முறை நடிகர் சித்தார்த் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் மதுரை விமான நிலையத்தில் அவமானப்படுத்த பட்டோம் என தெரிவித்திருந்தவர், மதுரை விமானநிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் இந்தியில் பேசினார்கள், நாங்கள் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் அவர்கள் இந்தியில் பேசினார்கள், காலியாக இருந்த விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம் என தெரிவித்த சித்தார்த்.

என் வயதான பெற்றோரிடம் சோதனையின் போது சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டனர். ஆங்கிலத்தில் பேசுங்க என்று தெரிவித்தும் இந்தியில் பேசி மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டதற்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியது.

ஆனால் சித்தார்த் சொன்னது போன்று விமானநிலையத்தில் நடக்கவில்லை என்றும், சித்தார்த்தை பரிசோதனை செய்த பெண் கூட தமிழ் தான், அந்த பெண் கூட தமிழில் தான் பேசினார்கள் என்று கூட விமான நிலைய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியானது. இதனை இந்திய வீராங்கனை சானியா நேவாலை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் நாடு முழுவதும் நடிகர் சித்தார்த்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமில்லாமல், இதனை சித்தார்த் விளம்பரம் படங்களில் நடிக்கும் பொருட்களை புறக்கணிப்போம் என வட மாநில மக்கள் எதிப்பு தெரிவித்தனர். இதனால் விளம்பர படங்களில் ஒப்பந்தம் செய்ய சித்தார்த்தை புறக்கணிக்க தொடங்கியது வியாபார நிறுவனங்கள். இதனால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் விளம்பர படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருந்த சித்தார்த், எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தை இழுத்து மூடினார்.

இப்படி கடும் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளான நடிகர் சித்தார்த், ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து சங்கருக்கு தோல்வியை கொடுத்து, மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்து மணிரத்தினத்திற்கும் தோல்வியை கொடுத்து, ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட தோல்வி நடிகர் என பெயர் பெற்ற சித்தார்த்தை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கிய சங்கருக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.