சொத்துக்காக அடித்து உருளும் சிவாஜி வாரிசுகள்… மொத்தம் எத்தனை ஆயிரம் கோடி சொத்து தெரியுமா.?

0
Follow on Google News

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, ராம்குமார் பிரபு, தேன்மொழி, சாந்தி என இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் பவுன் நகை, 500 கிலோ வெள்ளி, சாந்தி தியேட்டர், 2 ஏக்கரில் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம், மற்றும் பேரூரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்களை ராம்குமாரும் பிரபுவும் மோசடி செய்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் என சிவாஜி கணேசனின் இரண்டு மகள்களான சாந்தியும் தேன்மொழியும் குற்றச்சாட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த தி.நகரில் உள்ள அன்னை இல்லம் தற்பொழுது அவர்களுடைய வாரிசுகளின் சொத்து பிரச்சனை காரணமாக வழக்கு போடப்பட்டுள்ளது.

இதனால் அன்னை இல்லம் பூட்டு போடப்பட்டு யாருமே அங்க குடி இல்லாமல் பால் அடைந்த பங்களாவாக மாறி வருவதாக கூறப்படுகிறது. சினிமா துறையை சார்ந்தவர்கள் சிவாஜி கணேசனின் வாழ்ந்த அன்னை இல்லத்தை ஒரு கோவிலாக பார்த்தனர், காரணம் நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என்று சொல்லலாம், ஒரு காலத்தில் சினிமா துறையினர் நடிகர் சிவாஜி கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்று சென்றஇடம் அன்னை இல்லம்.

சிவாஜி கணேசன் மறைவுக்குப் பின்பும் கூட சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று சினிமா துறையை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு செல்வது போன்று சென்று வந்தனர், அப்படி பட்ட அன்னை இல்லம் இன்று அனாதை இல்லம் ஆகிவிட்டதே என்கின்ற வருத்தம் சினிமா துறையினருக்கு இருந்து வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் மறைவுக்கு பின்பு அவருடைய இரண்டு மகன்கள் ஆன ராம்குமார், பிரபு இருவருமே சிவாஜி கணேசன் எழுதியது போன்ற, ஒரு போலி உயிலை தயார் செய்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தான் சிவாஜி கணேசனின் இரண்டு மகள்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கிறது.

மேலும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி சொத்துக்களை கிடைக்காமல் பிரபுவும் ராம்குமாரும் இருவரும் இணைந்து செய்து விட்டார்கள் என்றும் சிவாஜி இரண்டு மகள்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். இந்த நிலையில் சிவாஜியின் பல்லாயிரம் கோடி சொத்துகளை பங்கு போட வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ள சிவாஜி கணேசனின் இரண்டு மகன்களும், சொத்துகளை சரிசமமாக பிரித்து தற்பொழுது சிவாஜி கணேசனுக்கு சொந்தமான 2000 கோடி சொத்துகளை ஆயிரம் கோடி இரண்டு மகன்களுக்கும், ஆயிரம் கோடி இரண்டு மகள்களுக்கும் பிரித்து தர வேண்டும் என்பதில் சட்ட ரீதியான முயற்சி செய்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் இருக்கும் பொழுதே தன்னுடைய சொத்துக்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காகவே தன்னுடைய குடும்பத்துக்குள்ளையே திருமணம் முடித்து வைத்தார், அதேபோன்று சிவாஜியின் பேரன்பேக்திகளும் அவர்கள் குடும்பத்துக்குள்ளையே சம்மதம் செய்து விட்டார்கள் அதாவது சொத்துக்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக தான் பிரபுவின் மகளை சொந்த சகோதரிகளான தேன்மொழியின் மகளுக்கு மனம் முடித்து வைத்து வைத்தார் பிரபு.

ஆனால் இந்த சொத்து சண்டை மிகப்பெரிய அளவில் வெடித்து இரண்டு குடும்பமும் பிரிந்து பிரபுவின் மகள் திருமண விவாகரத்து வரை சென்று தற்பொழுது பிரபுவின் மகளுக்கு இரண்டாம் திருமணமும் நடந்துள்ளது. இருந்தாலும் இவர்கள் சொத்து பிரச்சனையில் சமூக முடிவு ஏற்பட்டு சிவாஜி கணேசனின் வாழ்ந்த அனாதை இல்லமாக கிடந்து வரும் அன்னை இல்லம் மீண்டும் திறக்கப்பட்டு வேண்டும் என்பதே சினிமா துறையை சேர்ந்த பலரின் ஆசையாக இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here