இயக்குனர், நடிகர், கதையாசிரியர், என சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக முதல் முதலில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். பாரதிராஜா படம் மிக பெரிய வெற்றியை பெறுவதர்க்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாக்யராஜ். இதன் பின்பு இயக்குனராக, நடிகராக அவதாரம் எடுத்த பாக்யராஜ் அவரது குரு பாரதிராஜவை மிஞ்சும் அளவுக்கு வெற்றி பெற்றார்.
இந்திய திரையுலகில் இன்று வரை, திரைக்கதை அமைப்பில் பாக்ராஜை மிஞ்சும் அளவுக்கு ஆட்கள் இல்லை என தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது. இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த இயக்குனர் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு நடித்த அணைத்து படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளது பின்னணியில் அவர் தந்தை இயக்குனர் பாக்கியராஜ் தான் காரணம் என கூறபடுகிறது.
பல வெற்றி படங்களில் நடிகர் சந்தனு நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த போது அதை அவரின் தந்தை பாக்கியராஜ் செய்த குழப்பத்தால் அந்த வாய்ப்புகள் வேறு ஒருவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஜெயம், M குமரன் S/O மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களின் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்து வந்த இயக்குனர் மோகன் உனக்கும் எனக்கும் படத்தில் பாக்கியராஜ் நடித்த போது ஏற்பட்ட நட்பின் காரணமாக,
அவரது மகன் சந்தனுவை தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் கதையை தயார் செய்துள்ளார். இந்த படத்தின் கதையை சாந்தனு மற்றும் பாக்கியராஜ் இருவரிடம் மோகன் ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு பாக்யராஜ் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியுள்ளார், ஆனால் இதற்கு இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பு கொள்ளவில்லை, இதன் பின்பு தனது தம்பி ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தை இயக்கினார் மோகன் ராஜ்.
இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதே போன்று சுப்பிரமணியபபுரம் படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சாந்தனு தான். இயக்குனர் சசிகுமார் இந்த படத்தின் கதையை சாந்தனு மற்றும் அவரது தந்தை பாக்யராஜ் இருவரிடம் கூறியுள்ளார். கதையை கேட்டு கொண்ட பாக்கியராஜ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு சசிகுமார் ஒப்பு கொள்ளவில்லை.
இதன் பின்பு இந்த படத்தில் சாந்தனுவுக்கு பதில் நடிகர் ஜெய் நடித்தார், படம் மிக பெரிய வெற்றியை பெற்று அடுத்தடுத்து நடிகர் ஜெய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் இதே போன்று தந்தை பாக்கியராஜால் பல வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்த சாந்தனு எப்படியாவது சினிமாவில் வெற்றி பெற்று தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட வேண்டும் என இன்றளவும் போராடி வருகிறார் சாந்தனு.
அந்த வகையில் நடிகர் விஜய் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பி மாஸ்டர் படத்தில் கமிட்டானார். ஆனால் படம் வெளியான பின்பு சாந்தனு நடித்த பல காட்சிகள் நீக்கப்படத்தை பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார் சந்தனு. இந்நிலையில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில் சாந்தனு நடிப்பில் ராவண கூட்டம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
சுமார் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சாந்தனு நடிப்பு பாராட்டும் படியும்,படமும் நன்றாக இருந்தாலும் கூட 3 நாட்களில் சாந்தனுவின் இராவணக் கோட்டம் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது படக் குழுவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1 கோடியை கூட வசூலிக்காத இந்த படத்தை நம்பி வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.