கடந்த 2021ம் ஆண்டு மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் போதை பொருள் உட்கொண்டு உல்லாசம் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு காவல் துறைக்கு வந்த தகவலின் பேரில் நடந்த அதிரடி சோதனையில் போதை பொருளுடன் கையும் களவுமாக சிக்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அயூப் கான், இதனை தொடர்ந்து ஷாருக்கான் மகன் மற்றும் அவருடைய நண்பர்கள் 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக இந்த வழக்கின் பொது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாக பொது சாட்சியான பிரபாகர் சாயில் அப்போது தெரிவித்தவர்.
மேலும், இதில் ரூ.8 கோடி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்க பேரம் பேசியதாக சயில் தெரிவித்தார். 8 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட சமீர் வான்கடே தலைமையில் தான் ஷாருக்கான் மகன் ஆயிப் கான் இருந்த கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது. இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது. இதன் பேரில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என் சி பி அதிகாரி சமீர் வான்கடே சமீபத்தில் சென்னைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். மேலும் சமீர் வான்கடே மீது சிபிஐ அதிரடியாக வழக்கு பதிவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மீது வழக்கு பதியாமல் இருக்க சமீர் வான்கடே உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுத குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே மீண்டும் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.