சரத்குமாருக்கு வாழ்க்கை கொடுத்தவர் இன்று பரிதாபத்தில்…. கண்டு கொள்ளாத சரத்குமார்…என்ன உலகம்.?

0
Follow on Google News

தமிழ்த் திரையுலகில் ஆரம்பகட்டத்தில் எதிர்மறை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சரத்குமார் கதாநாயகனாக அறிமுகமானது சூரியன் என்ற படத்தில்தான். பவித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஷங்கர் உதவி இயக்குனராக பணி புரிந்தார். அந்த காலகட்டத்தில் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் என கோடிகளை கொட்டி பல வெற்றிப் படங்களை தயாரித்து அதிரடி ஹிட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோன்.

சூரியன் படத்தில் சரத் குமாரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர் குஞ்சுமேனன். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள சூரியன் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 90ஸ்களில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த சூரியன் மிக பெரிய ஹிட் அடித்த பின்பு தொடர்ந்து, சூர்ய வம்சம்,, நாட்டாமை, சேரன் பாண்டியன், நட்புக்காக என பல படங்கள் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்தது மட்டுமின்றி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சரத்துக்குமார்.

அப்போது, சரத் குமாரின் மார்க்கெட் ஓங்கியிருந்த காலம். ஆனால், அடுத்தடுத்து இளம் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவே, ஒரு கட்டத்தில் இவருக்கான மார்க்கெட் குறைந்து போனது. அவ்வப்போது சில படங்கள் வெளியானது. மற்றொரு பக்கம், ஒரு காலத்தில் வெற்றிப் படங்களால் கோடிகளை குவித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன், அடுத்து ரட்சகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து பெரும் நஷ்டத்தை கண்டார்.

நஷ்டத்தால் சோர்ந்து போன குஞ்சுமோன் ஒரு கட்டத்தில் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார். தனக்கான அங்கீகாரத்தை பெற்று, முன்னணி கதாநாயகனாய் வலம் வந்த சரத் குமார், தனக்கான பட வாய்ப்புகள் குறையவே இடையில் காணாமல் போயிருந்தார், ஆனாலும் தற்பொழுது வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் தன் செகண்ட் இன்னிங்ஸில் தெறிக்கவிட்டு வருகிறார்.

சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இப்படத்தின் வெற்றி சரத்குமாரை மீண்டும் பிஸி நடிகராக மாற்றிவிட்டது. இந்நிலையில், சரத்குமாரை முதன்முதலில் கதாநாயகனாக ஏற்று சூரியன் படத்தை தயாரித்த குஞ்சுமோன், இப்போது பலவருடங்கள் கழித்து ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்கவிழா சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிப்பதற்காக சரத் குமாரை குஞ்சுமோன் கேட்டிருக்கிறார்.போர் தொழில் படம் வருவதற்கு முன்பு ஓகே என தெரிவித்த சரத்குமார் போர்த்தொழில் வெற்றியைக் கண்டு மயங்கிய பின்பு, ஹீரோவுக்கு சமமான கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன். உங்கள் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தால் என் இமேஜ் பாதிக்கப்படும், மன்னிக்கவும் ஒருபொழுதும் நடிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.

அதுமட்டுமின்றி, ஜென்டில்மேன் 2 பட விழாவிலும் சரத்குமார் கலந்துகொள்ளவில்லையாம். ஒரு காலத்தில் சரத்குமாரை ஹீரோவாக்கி அழகு பார்த்தேன் நான், ஆனால் இப்போது சிறிதும் அதனை நினைத்துப் பார்க்காமல் பட்டென்று பேசிவிட்டாரே என்று குஞ்சுமோன் புலம்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, இன்று பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கரை ஜெண்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தவர் கே.டி.குஞ்சுமேனன், ஆனால் தற்பொழுது கே.டி.குஞ்சுமேனன் எடுக்க இருக்கும் ஜெண்டில்மேன் 2 படத்தின் பட பூஜை விழாவில் இயக்குனர் சங்கரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.