மறைந்த நடிகர் சரத்பாபுவின் முதல் மனைவி ரமா பிரபா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது ஆந்திராவில் ஒரு குக் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி தனியாக வசித்து வரக்கூடியவர் ராமா பிரபா. அனந்தபூர் அருகில் ஒரு குக் கிராமத்தில் ஏழை விவசாயிக்கு பிறந்த 13 குழந்தைகளில் ஒரு குழந்தை தான் ரமா பிரபா.
தன்னுடைய 13 குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த அந்த ஏழை விவசாயியின் தங்கைக்கு குழந்தை இல்லாததால், தன்னுடைய அண்ணனிடம் இருக்கும் 13 குழந்தைகளில் ஒரு குழந்தையை கேட்டு தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தை தான் ராமா பிரபா. அந்த விவசாயியின் தங்கையின் கணவர் ஊட்டியில் உள்ள ஒரு forest ஆஃபீசராக அரசு வேலையில் இருக்கிறார்.
ரமாபிரபா ஊட்டியில் தன்னை தத்தெடுத்து வளர்த்த அத்தை, மாமா உடன் வளர்க்கிறார், ஆனால் அத்தை – மாமா என்று ராமா பிரபாவுக்கு தெரியாமலே இவர்கள் தான் உண்மையான அம்மா – அப்பா என ராமா பிரபா நினைத்து வளர்ந்து வருகிறார். ரமா பிரபாவுக்கு 12 வயது இருக்கும் பொழுது அவரை வளர்த்து வந்த மாமா இறந்து விடுகிறார். இதனால் அவர் பார்த்து வந்த வேலையும் பறிபோகிறது.
இனி ஊட்டியில் இருந்து என்ன செய்வது என ஊட்டியை விட்டு வெளியேறி ரமா பிரபாவும் அவரை வளர்த்து வந்த அத்தையும் சென்னைக்கு வருகிறார்கள். இந்த ஒரு சூழலில் ரமா பிரபா விவசாய தந்தையும் இறந்து விடுகிறார். அப்போது மற்ற குழந்தைகளும் ரமா பிரபாவின் தாயாரும் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். இதன் பின்பு தான் ராமபிரபாவுக்கு தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட விவகாரம் தெரிய வருகிறது.
ரமா பிரபாவுக்கு தமிழ் தெலுங்கு சிறுவயதிலேயே பேசத் தெரிகிறது, இந்த நிலையில் சென்னையில் தன் உடன் பிறந்தவர்கள் 13 பேர் மற்றும் தாய் இவர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்போது 12 வயது சிறுமியான ரமா பிரபா நாடகங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைகிறார்.பலர் புறக்கணித்த நிலையில், ஒரு சில வாய்ப்புகள் அவர் அவருக்கு கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் ரமாபிரபா நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றதும், தொடர்ந்து அவருக்கான வாய்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் நாடகத்தில் நடித்த ரமாபிரபா அடுத்து சினிமாவிற்கு முயற்சி செய்கிறார். ரமாபிரபாவுக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கிறது.
தமிழில் எப்படி மனோரமா அந்த காலத்தில் புகழ்பெற்றிருந்தாரோ.? அதே போன்று தெலுங்கில் காமெடி நடிகையாக உச்சத்தில் அப்போது இருந்துள்ளார் ராமா பிரபா. ஜெய்சங்கர் உடன் இணைந்து உத்தரவின்றி உள்ளே வா என்கின்ற படத்தில் ரமா பிரபா நடித்தர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, உடனே அந்தப் படத்தின் தெலுங்கு ரைட் ஸ் வாங்கி விடுகிறார் ராமா பிரபா.
இதனைத் தொடர்ந்து அடுத்த நான்கு வருடங்களில் தெலுங்கில் ரமாபிரபா சொந்தமாக இந்த படத்தை தயாரிக்கிறார். ஜெய்சங்கர் நடித்த கேரக்டரில் சரத் பாபு நடிக்கிறார் படம் வெளியாகி காலை முதல் சோவிலே படம் வரவேற்பு இல்லை. அடுத்தடுத்து சோக்கள் பல திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. முதல் நாளிலேயே அந்த படம் முடங்கி போகிறது.
இந்த நிலையில் ரமாபிரபா சிறு வயதிலிருந்து நடனமாடி, நாடகங்களில் நடித்து, சினிமாவில் நடித்த மொத்த பணமும் அந்த ஒரே படத்தை தயாரித்ததின் மூலம் இழந்து விடுகிறார். நடு ரோட்டுக்கு வந்து விடும் ரமா பிரபாவுக்கு அப்போது சரத்பாபு ஆதரவாக இருக்கிறார். இதன் பின்பே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து. தன்னைவிட 5 வயது அதிகமான ராமாபிரபாவை திருமணம் செய்கிறார் சரத்பாபு.