தந்தை பாக்யராஜ் பேச்சை கேட்டு நாசமா போன சாந்தனு..! இப்ப வருத்தப்பட்டு என்ன செய்ய.?

0
Follow on Google News

இயக்குனர், நடிகர், கதையாசிரியர், என சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக முதல் முதலில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். பாரதிராஜா படம் மிக பெரிய வெற்றியை பெறுவதர்க்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாக்யராஜ். இதன் பின்பு இயக்குனராக, நடிகராக அவதாரம் எடுத்த பாக்யராஜ் அவரது குரு பாரதிராஜவை மிஞ்சும் அளவுக்கு வெற்றி பெற்றார்.

இந்திய திரையுலகில் இன்று வரை, திரைக்கதை அமைப்பில் பாக்ராஜை மிஞ்சும் அளவுக்கு ஆட்கள் இல்லை என தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது. இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த இயக்குனர் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு நடித்த அணைத்து படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளது பின்னணியில் அவர் தந்தை இயக்குனர் பாக்கியராஜ் தான் காரணம் என கூறபடுகிறது.

பல வெற்றி படங்களில் நடிகர் சந்தனு நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த போது அதை அவரின் தந்தை பாக்கியராஜ் செய்த குழப்பத்தால் அந்த வாய்ப்புகள் வேறு ஒருவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஜெயம், M குமரன் S/O மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களின் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்து வந்த இயக்குனர் மோகன் உனக்கும் எனக்கும் படத்தில் பாக்கியராஜ் நடித்த போது ஏற்பட்ட நட்பின் காரணமாக,

அவரது மகன் சந்தனுவை தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் கதையை தயார் செய்துள்ளார். இந்த படத்தின் கதையை சாந்தனு மற்றும் பாக்கியராஜ் இருவரிடம் மோகன் ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு பாக்யராஜ் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியுள்ளார், ஆனால் இதற்கு இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பு கொள்ளவில்லை, இதன் பின்பு தனது தம்பி ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தை இயக்கினார் மோகன் ராஜ்.

இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதே போன்று சுப்பிரமணியபபுரம் படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சாந்தனு தான். இயக்குனர் சசிகுமார் இந்த படத்தின் கதையை சாந்தனு மற்றும் அவரது தந்தை பாக்யராஜ் இருவரிடம் கூறியுள்ளார். கதையை கேட்டு கொண்ட பாக்கியராஜ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு சசிகுமார் ஒப்பு கொள்ளவில்லை.

இதன் பின்பு இந்த படத்தில் சாந்தனுவுக்கு பதில் நடிகர் ஜெய் நடித்தார், படம் மிக பெரிய வெற்றியை பெற்று அடுத்தடுத்து நடிகர் ஜெய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் இதே போன்று தந்தை பாக்கியராஜால் பல வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்த சாந்தனு, தற்போது மனைவி கிகி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வருவதாகவும், பல வெற்றி படங்களின் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்த போது அதை பயன்படுத்தி கொள்ளாமல் தற்போது அதை நினைத்து வருத்தப்பட்டு வருவதாக கூறபடுகிறது

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது….